கேரளாவில் அடுத்த அதிர்ச்சி: சூட்கேஸில் மனித எலும்புக்கூடு! - Seithipunal
Seithipunal


கேரளாவின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு தேவாலயக் கல்லறை அருகே சூட் கேசில் மனித எலும்புக்கூடு கைப்பற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கல்லறை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் அந்த இடத்தில் ஒரு சூட்கேஸ் இருப்பதை கவனித்தனர். அந்த சூட்கேஸில் மர்ம பொருள் இருக்கலாம் என சந்தேகித்த அவர்கள் உடனடியாக காவல்துறையிடம் தகவல் தெரிவித்தனர்.  

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் முதலில் வெடிகுண்டு போன்ற விஷயம் இருக்கலாம் என கவனமாக செயல்பட்டனர். ஆனால், சூட்கேஸை திறந்தபோது அதில் மனித எலும்புக்கூடு இருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  

இதனையடுத்து, எலும்புக்கூட்டின் தோற்றம் மற்றும் அவை எவ்வளவு காலமாக இருந்தது போன்ற விவரங்களை உறுதிப்படுத்தவதற்காக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

"எலும்புக்கூட்டின் வயது மற்றும் மரணத்திற்கான காரணம் போன்றவை ஆய்வுக்குப் பிறகே உறுதி செய்யப்படும்" என போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்தனர்.  

மேலும், போலீசார் நடத்திய தொடக்க விசாரணையில், அந்த சூட்கேஸ் சாலையிலிருந்து கல்லறைப் பகுதிக்குள் வீசப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kerala Kollam Manitha Elumbu Koodu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->