வெடிகுண்டு!!! காஞ்சிபுரத்தில் ரவுடி கொலை! முழு விவரம் வேண்டுமா?
in Kanchipuram uknown members through bomb to murder rowdy
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா என்பவர். அப்பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையிலுள்ளன. இன்று அவரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் மாநகராட்சி பகுதியான திருக்காலிமேடு பகுதியில் சுற்றி வளைத்தது.

இதைத் தொடர்ந்து அவர் மீது வெடிகுண்டு வீசியதுடன், அரிவாள், கத்தியால் வெட்டிக் கொலை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் , உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பிடிபடாமல் தப்பியோடிய கொலை கும்பலை காவலர்கள் தேடி வருகின்றனர்.
தீடிரென பட்டப்பகலில் நடந்த இக்கொலை சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத்தொடர்ந்து காவலர்கள் மேற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.
English Summary
in Kanchipuram uknown members through bomb to murder rowdy