பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து  40 தடுப்பணைகளை கட்டியுள்ளேன்.. .அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் இதுவரை பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த நான் 40 தடுப்பணைகளை கட்டியுள்ளேன் என்றும்  பாலாற்றில் மூன்று புதிய தடுப்பணைகளை கட்டபடும் என்றும் பத்தரப்பள்ளி அணை வழக்கில் சிக்கியுள்ளது அதுவும்  கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்மாவட்டம்,கேவிக்குப்பம் பேருந்து நிலையத்தில் குடியாத்தம் மோர்தான பிரதான இடது புற கால்வாய்  தூர்வாரும்  திட்டம் ரூ. 2.50.கோடி மதிப்பீட்டில் திட்டம் துவக்க விழா  மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமையில் நடைபெற்றது ,இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார்,அமுலு, ஒன்றிய குழு தலைவர்கள் ரவிச்சந்திரன்,சத்தியானந்தம்,  மேல்பாலாறு வடிநிலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மோர்தானா இடது புற கால்வாய் தூர்வாரும் திட்டத்தினை துவங்கி வைத்தார்.  அப்போது    இவ்விழாவில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில், மோர்தானா கால்வாய் பல ஏரிகளுக்கு தண்ணீர் செல்ல பயன்படுகிறது ,மேலும் நீண்ட நாள் போராட்டமாக கோரிக்கை ஒன்றும் வைத்தனர் .

இந்த நிலையில் மோர்தானா கால்வாயில் அதிக தண்ணீர் வந்தால் அதனை திருமணி வரையில் விடுவேன் அதே போல் பாலாற்றில் இன்னொரு பக்கம் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டுகிறோம், கவசம்பட்டில் தடுப்பணையை கட்டுகிறோம். அந்த தண்ணீர் காவனூர் வரையில் வரும் வருடம் முழுவதும் தண்ணீர் கிடைக்கும் நிலத்தடி நீரும் பெருகும் .

இந்த ஆண்டு புதியதாக இரண்டு மூன்று தடுப்பணைகளை பாலாற்றில் கட்டவுள்ளோம், இது மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள அவ்வளவு குளங்களையும் ஏரிகளையும் பராமரிப்பது தான் என் வேலை பேர்ணாம்பட்டு பத்தரப்பள்ளி அணை கட்டும் திட்டம் வழக்கில் உள்ளது. ஆகையில் அந்த திட்டம் தத்தளித்துகொண்டிருக்கிறது ,பிறகு அதையும் கட்டுவோம் என்னை பொருத்தவரையில் நான் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த போது 40 அணைகளை கட்டியுள்ளேன் நான் எந்த ஊருக்கு போனாலும் என் பெயரை சொல்வார்கள் என பேசினார் .இவ்விழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

As PWD minister I have built 40 check dams Minister Duraimurugan is proud


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->