சளி, இருமலுக்கு தொண்டைக்கு இதமான ஆட்டுக்கால் சூப்! சுலபமான ரெஸிபி இதோ!
Delicious and spicy aatukaal soup recipe
நாவிற்கு சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நம் உடலின் வலுவிற்கும் ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை உள்ளடக்கிய ஆட்டுக்கால் சூப்பை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம் பாருங்கள்
தேவையான பொருட்கள் :
ஆட்டுக்கால் - 4
சின்ன வெங்காயம் - 15-20
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 3/4 டேபிள்ஸ்பூன்
மிளகு - 2 டேபிள்ஸ்பூன்
சிவப்பு மிளகாய் - 5
தனியா - 1 1/2 மேஜைக்கரண்டி
இஞ்சி துண்டு - 1 துண்டு
பூண்டு பல் - 14
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 2
நட்சத்திர பூ --1
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
ஆட்டுக்காலை நன்றாக வதக்கி அதில் இருக்கும் முடிகளை நீக்கி சுத்தமாக மஞ்சள் பொடி போட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும்.
இப்போது குக்கர் ஒன்றை எடுத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, நட்சத்திர பூ, ஏலக்காய் ஆகியவற்றை போட்டு நன்றாக தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் சிவப்பு மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
இவை நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து தக்காளி சாஃப்ட்டாகும் வரை வதக்கி இவற்றோடு மஞ்சள் தூள், சோம்பு பொடி, சீரகப்பொடி, தனியா பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிய பின் கழுவி வைத்திருந்த காலைப் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விட வேண்டும்.
ஒரு 15 விசில் வரும் வரை வைத்து அதன் பிறகு அந்த அழுத்தம் போகும் வரை வைத்து குக்கரை திறந்து கொஞ்சம் கொத்தமல்லி தூவி கோப்பையில் ஊற்றி பரிமாறினால் சூப் ரெடி.
English Summary
Delicious and spicy aatukaal soup recipe