சூப்பரான ரம்ஜான் ஸ்பெஷல் அரேபிக் ஸ்வீட் பான் கேக்! அசத்தல் ரெஸிபி.! - Seithipunal
Seithipunal


ரம்ஜான் பண்டிகை கிட்ட நெருங்கிடுச்சு. அன்னைக்கு இது போல சூப்பரான அரேபிக் நான் கேக் செஞ்சி அசத்திடுங்க!


தேவையான பொருட்கள்:

கஸ்டர்ட் அல்லது சோள மாவு - 2 டீ ஸ்பூன்
சர்க்கரை - 6 டீஸ்பூன்
பால் - 2 கப்
ரவா - 1 கப்
ஏலக்காய் தூள் - 1/4 டீ ஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

முதலில் க்ரீம் செய்வதற்கு ஒரு சாஸ் பேனில் சோள மாவு, சர்க்கரை, 1 கப் பால் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி வைத்துக் கொள்ளவும்.


ரவையில் 1 கப் பாலை ஊற்றி 1/2 மணிநேரம் ஊறவைத்தப் பின் மிக்ஸியில் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த கலவையை சிறிது சிறிதாக தோசை போல் ஊற்றி எடுத்துக் கொள்ளவும். அந்த பான் கேக்கின்  நடுவில் செய்து வைத்த க்ரீமை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு வைத்து பாதியாக மூடிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து சிரப் பதத்திற்கு வரும் வரை கிளறி விட்டு எடுத்துக் கொள்ளவும்.

செய்து வைத்த பான் கேக்கை எண்ணெய்யில் மிதமான சூட்டில் பொறித்தெடுத்து சர்க்கரை பாகில் ஊறவைத்து எடுத்தால் அரேபியர் நான் கேக் ரெடி.!

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delicious Arabic sweet pan cake receipe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->