ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே சென்னா மசாலா எப்படி செஞ்சு அசத்துங்க! - Seithipunal
Seithipunal


வீட்டிலேயே சூப்பரான சென்னா மசாலா எப்படி செய்வது என்று இப்ப பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:
வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
வெங்காயம் - 1 
பூண்டு - 4
இஞ்சி - 1 துண்டு
மல்லி தூள் - 1/2 டீஸ்பூன் 
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் 
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
ஆம்சூர் பவுடர் - 1/2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக்கடலையை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.

முதலில் குக்கரில் கொண்டைக்கடலையுடன் உப்பு சேர்த்து 4 முதல் 5 விசில் வரும் வரை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதங்கியதும், பூண்டு, இஞ்சி, கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சீரகத்தூள், மல்லித்தூள், ஆம்ச்சூர் பவுடர்  இவற்றை உப்பு சேர்த்து நன்றாக ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து 5 முதல் 7 நிமிடம் மூடி வைத்து வேக விடவும்.

வதங்கிய பொருட்களை நன்றாக ஆற விட்டு மிக்ஸியில் நன்கு மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, சீரகம்  பொரிந்ததும் அரைத்து வைத்த கலவையை சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட்டு தண்ணீர் ஊற்றி வேகவைத்த வெள்ளை கொண்டைக்கடலையை சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக கிளறிவிட்டு கொத்தமல்லி இலைகளை மேலாக தூவி விட்டால் சுவையான சென்னா மசாலா கிரேவி ரெடி!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delicious channa masala receipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->