சுவையான மட்டன் கோலா உருண்டை இப்படி செஞ்சு பார்க்கலாம்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருள்கள்:
மட்டன் கீமா- 250 கி
சின்ன வெங்காயம் - 200 கிராம்
பச்சைமிளகாய் -5
பொட்டுகடலை- 40 கிராம்
தேங்காய் - அரை மூடி 
இஞ்சி -1 சின்ன துண்டு
பூண்டு - 5
உப்பு - தேவைக்கேற்ப
கச கசா - 1 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - 1 கொத்து
முட்டை - 1 
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், கச கசா போட்டு பொறிந்தவுடன், பொட்டுக்கடலை, கீமாவைச் சேர்த்து நன்றாக வதக்கி விடவும். பின்பு சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

தேங்காய், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நன்றாக வதக்கி விடவும். வதக்கியப்பின் நன்றாக ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் சேர்த்து நற நறப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்த கலவையினுள் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் உருண்டைகளை போட்டு பொறித்தெடுத்தால் சுவையான மட்டன் கோலா உருண்டை தயார்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delicious mutton Gola urundai receipe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->