சுடு தண்ணியை இப்படி குடித்தால்.. ஆபத்தா.?! உஷார் மக்களே.! - Seithipunal
Seithipunal


அன்றாடம் காலை வெண்ணீர் குடித்தால் உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். இரண்டு டம்ளர் வெண்ணீர் எடுத்துக் கொள்ளும் போது உடலில் உள்ள பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்படுகின்றன. உடலில் புதிய அமிலங்கள் உற்பத்தி செய்யப்படும்.

மேலும் செரிமான மண்டலம் திறம்பட வேலை செய்ய இது உதவுவதால் உடல் எடை குறையும். மலச்சிக்கல் பிரச்சனையையும் இது தீர்க்கும். எந்த ஒரு உணவையோ அல்லது மருந்தையோ கூட அதிகப்படியாக எடுத்துக் கொண்டால் அது பாதிப்பு தரும் என்பது மறுக்க முடியாது.

அது போல தான் வெந்நீர் அதிக அளவு குடித்தால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பார்க்கலாம். சிறுநீரகம் உடலில் இருக்கும் தேவையற்ற கழிவுகளை அகற்ற உதவுகிறது. வெந்நீர் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் என்றாலும் அதை அதிக சூடாக குடித்தால் சிறுநீரகத்தின் வேலை அதிகரிக்கும். எனவே அது செயலிழக்க துவங்கும்.

இது போல தொடர்ந்து சிறுநீரகத்திற்கு அதிக வேலை கொடுப்பது விரைவில் சிறுநீரகம் முழுமையாக செயலிழக்க வழிவகை செய்யும். 

மேலும் தாகம் இல்லாமல் அதிகப்படியாக வெந்நீர் எடுத்துக் கொள்வதால் மூளை திறன் பாதிக்கப்படும். அதிகப்படியான சூடான நீரை குடிக்கும் போது மூளை செல்களில் வீக்கம் ஏற்படும். இது மூளை தொடர்பான பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

இரவில் உறங்குவதற்கு முன் வெந்நீர் எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகவும் தீங்கை ஏற்படுத்தும். அப்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏற்படுவதால் இது தூக்கத்தை பாதிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Disadvantages of hot water


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->