ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைய வேண்டுமா.. இந்த வடை ட்ரை பண்ணுங்க..! - Seithipunal
Seithipunal


உடல் நலத்தை பேணிக்காக்க இன்றைய நிலையில் பெரிதும் போராடுகிறோம். ஆனால் உணவில் சுவை குறையாமல் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இன்று வாழைப்பூவில் வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

வாழைப்பூ - 1, 

கடலைப்பருப்பு - தேவைக்கேற்ப 

பச்சை மிளகாய் - 5 

காய்ந்த மிளகாய் - 2 

பெருஞ்சீரகம் - சிறிது

வெங்காயம் - 2

கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

இஞ்சி, பூண்டு, உப்பு - தேவைக்கேற்ப 

செய்முறை:

முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கவும். பிறகு ஒரு கப் கடலைபருப்பு மற்றும் இரண்டு காய்ந்த மிளகாய் சேர்த்து 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் தூள், வாழைப்பூ, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு உருட்டி சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இப்போது சூடான மற்றும் சுவையான மொறு மொறு வாழை பூ வடை தயார். வாழைப்பூ சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும் மற்றும் உடல் சூட்டை தணிக்கும். கை கால் எரிச்சல் குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do you want to reduce blood sugar try this tips


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->