'வருமுன் காப்பதே சிறந்தது' - மழைக் காலத்தில் என்னென்ன செய்யலாம், செய்யக் கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்..!! - Seithipunal
Seithipunal


பொதுவாக மழைக் காலம் ஆரம்பித்தாலே கூடவே சளி, இருமல், காய்ச்சல், தொண்டை வலி என வரிசையாக நோய்களும் படையெடுக்க ஆரம்பித்து விடும். அதே போல் மழைக் காலங்களில் கொசுக்களின் இனப்பெருக்கமும் அதிகளவில் இருக்கும். 

எனவே கொசுக்களின் மூலம் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்களும் பெருகும். கொசுக்கள் தண்ணீரில் தான் முட்டையிடும் என்பதால் தண்ணீர் வைத்துள்ள பாத்திரங்கள், தொட்டிகள், பேரல்கள் போன்றவற்றை மூடி வைக்க வேண்டும். மேலும் நீரை எப்போதும் காய்ச்சியே குடிக்க வேண்டும். 

வெளியே சென்று வந்தால் முதலில் கை மற்றும் கால்களை நன்கு கழுவ வேண்டும். மேலும் கால்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் கால்களின் மூலம் தான் கிருமிகள் உடலுக்குள் நுழையும் எனபதை கவனத்தில் கொள்ளவேண்டும். 

காய்கறிகள், பழங்கள், கீரைகள் என்று எது வாங்கினாலும், பலமுறை நன்கு அலசிய பிறகே பயன்படுத்த வேண்டும். அதேபோல் சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக கழுவ வேண்டும். குறிப்பாக வெளியில் கடைகளில் சமைத்து விற்கும் உணவுப் பண்டங்களை வாங்கி உண்ணவே கூடாது. இவற்றால் தொற்று ஏற்படும் அபாயம் உண்டு. 

மழைக் காலங்களில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மஞ்சள் மற்றும் பனங்கற்கண்டு கலந்த பால் குடிக்கலாம். சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் ஏதேனும் சூப் வைத்துக் குடிக்கலாம். குறிப்பாக கொள்ளு சூப் குடிக்கலாம். மேலும் சுண்டைக்காயை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 

பழ ஜூஸ் குடிக்க வேண்டுமானால் வீட்டிலேயே தயாரித்துக் குடியுங்கள். கடைகளில் வாங்கி குடிக்காதீர்கள். சளித் தொல்லை உள்ளவர்கள் டீயில் இஞ்சி தட்டிப் போட்டு குடிக்கலாம். ஒமேகா 3 அதிகமுள்ள மீன் உணவுகளை உண்ணலாம். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dos and Donts For Monsoon Season


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->