உணவில் அதிக அளவில் புளி சேர்த்து கொள்பவரா நீங்கள்... அப்போ இந்த ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்.!  - Seithipunal
Seithipunal


சமையலில் புளி முக்கிய பங்கு வகிக்கிறது. சாம்பார், புளி குழம்பு, மீன் குழம்பு, சட்னி போன்றவற்றில் புளி சேர்த்து சமைக்கிறோம். அதிக அளவிலான புளி சேர்த்துக் கொள்வதால் நமது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

* உணவில் புளி அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் ரத்தம் உறைதல் ஏற்படும். அதோடு இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். இதனால் நாட்டு மருந்து சாப்பிடுபவர்கள் உணவில் அதிக அளவிலான புளி சேர்க்கக் கூடாது என தெரிவிப்பார்கள். 

* புளி அதிகமாக சேர்த்து உணவுகளை உட்கொள்ளும் பொழுது ஒவ்வாமை உண்டாகும். சருமம் சிவந்திருப்பது, வீக்கம், தலைவலி, வாந்தி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். புளி அதிகமாக சேர்த்துக் கொள்வதால் இதில் உள்ள அமிலத்தன்மை காரணமாக பற்களில் பிரச்சனை ஏற்படும். சில நபர்களுக்கு நாக்கில் அரிப்பு போன்றவை ஏற்படும். 

* அதிக அளவில் புளி உட்கொள்வதால் பித்தப்பையில் கற்கள் உருவாகும். காய்ச்சல், தலைவலி, வயிறு வலி, மஞ்சள் காமாலை,செரிமான கோளாறு போன்ற உடல் பிரச்சினைகளை உண்டாக்கும். 

* அதிக அளவில் புளி சேர்த்த உணவுகளை சாப்பிட்டால் செரிமானம் பிரச்சனை உண்டாகும். நாளடைவில் வயிற்று வலி, வைட்டமின் குறைபாடு போன்றவை ஏற்படும். புளியில் அமிலத்தன்மை அதிக அளவு இருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேறாது. 

* இதனால் வயிறு உப்பசம், மலச்சிக்கல் போன்றவை ஏற்படும். சளி, இரும்பல் பிரச்சனை இருப்பவர்கள் புளி சேர்க்காமல் இருப்பது நல்லது. புளி நுரையீரலுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் மூச்சு விடுவதில்லை சிரமம், நுரையீரல் கோளாறு போன்றவை ஏற்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eating too much tamarind harm your health


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->