மணிக்கு 75 கி.மீ வேகத்தில் சூறை காற்று! 4 நாள் மீனவர்களுக்கு தடை!
IMD Alert Fisherman warn
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால் காற்றின் வேகம் அதிகபட்சமாக வீசும் என்பதால் இன்று முதல் 29ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கையின்படி, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலை கொண்டுள்ளதால் தமிழ்நாடு கடற்பகுதியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை காற்றின் வேகம் அதிகபட்சமாக 75 கி.மீ வரை வீசக்கூடும் என்பதால் மேற்கண்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மீனவர்களுக்கான இந்த வானிலை எச்சரிக்கையினை தங்கள் மீனவ கிராம ஆலயங்கள் வாயிலாக அறிவிப்பு செய்திடவும், மீன்பிடி ஏலக்கூடங்களில் அறிவிப்பு பலகையில் மீனவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.