புரதச்சத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் இவ்வளவு பெரிய ஆபத்து வருமா.? உஷார்.! - Seithipunal
Seithipunal


புரதச்சத்து என்பது நம் உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்து ஆகும். இந்த ஊட்டச்சத்து நம் தசை வளர்ச்சிக்கு பயன்படுவதோடு உடலின் முக்கியமான செயல்பாடுகளிலும் இது முக்கிய பங்கு வைக்கிறது. எனவே புரதச்சத்து அதிக அளவில் எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. எனினும் எந்த விஷயத்திலுமே அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு என்பது போல புரத உணவையும் அதிக அளவில் எடுத்துக் கொண்டால் நமது சிறுநீரகத்திற்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது அவை என்ன என்று பார்ப்போம்.

ஆரோக்கியமாக வாழ்வதற்கு சம விகித உணவு அவசியமாகும். சம விகித உணவு என்பது  எல்லா சத்துக்களும் தேவையான அளவு சமவீதத்திலிருப்பது. இந்த உணவை தான் நாம் உட்கொள்ள வேண்டும். புரதச்சத்தும் நம் உடலுக்கு அவசியமான ஒன்றுதான் என்றாலும் அளவுக்கு மீறி அதனை நாம் எடுத்துக் கொள்ளும் போது நமது சிறுநீரகங்களை பாதிக்கும்.

அதிகமாக புரதச்சத்துக்களை எடுத்துக் கொள்ளும் போது நமது ரத்த நாளங்களின் அகலம் அதிகரிக்கிறது. இது குளோமெருலர் வடிகட்டும் விதத்தை பாதிக்கிறது. இதன் தாக்கத்தினால் சிறுநீரகங்கள் செயலிழப்பிற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

அதிக அளவிலான புரதச்சத்தை மட்டும் எடுத்துக் கொள்வது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. மேலும் நீண்ட நாட்களாக மது அருந்தி வருபவர்களும்  புரத உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரகத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

மோர் புரதம் என்பது பாலாடை கட்டி தயாரிக்கப்பட்ட பிறகு எஞ்சியிருக்கும் உருண்டைகள் ஆகும். இவற்றில் அதிக அளவு புரதச்சத்து இருக்கும். இவை கேன்சர் எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. மேலும் உடலில் பல்வேறு விதமான நன்மைகளை வழங்கக்கூடியது. இருந்தாலும் சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் இவற்றை எடுத்துக் கொண்டால்  சிறுநீரக செயலிழப்பு வரை விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Effects of excessive protein intake


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->