ஈவ்னிங் ஸ்நாக்ஸ்க்கு அசத்தலான முட்டை போண்டா இப்படி செஞ்சு அசத்துங்க!
Evening time snack egg pakora receipe
அசத்தலான முட்டை போண்டா ஈவ்னிங் ஸ்நாக் இப்படி செஞ்சு அசத்துங்க!
தேவையான பொருட்கள் :
அவித்த முட்டை - 6
கடலை மாவு - 1 கப்
பச்சரிசி மாவு - 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மஞ்சள் தூள் மிளகாய் தூள் பேக்கிங் சோடா உப்பு ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
2. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் வேக வைத்துள்ள முட்டையை, கலந்துவைத்த மாவில் முக்கி நன்கு பிரட்டி எடுக்க வேண்டும்.
3. அதன் பின் எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாக எல்லா முட்டையையும் பொரித்து எடுத்து இரண்டாக வெட்டி மிளகுதூள் போட்டால் அசத்தலான முட்டை போண்டா சாப்பிட தயார்!
English Summary
Evening time snack egg pakora receipe