காலையில் ரொம்ப தாமதமாக தூக்கத்திலிருந்து எழுபவரா நீங்கள்? அப்ப இது உங்களுக்குதான்! - Seithipunal
Seithipunal


நம் பண்டைய காலம் தொட்டே அதிகாலையில் எழுவதையும் இரவில் சீக்கிரமே உறங்க செல்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தோம். ஆனால் இன்றைய நவீனமான உலகமோ இரவை பகலாக்கும் மாயாஜாலத்தை கொண்டிருப்பதால் தொற்று நோய்கள் மட்டுமல்லாமல் மன அழுத்தம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற பல வகையான நோய்களுக்கும் ஆளாகின்றோம். இதனைத் தவிர்த்து ஆரோக்கியமுடன் வாழ இரவில் சீக்கிரம் கண் உறங்கி அதிகாலை நேரத்தில்  விழிப்பதாகும். இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்.

அதிகாலை நேரத்தில் எழுவதால் நமது உடல் உற்சாகமாக இருப்பதோடு மூளை நரம்புகளும் சுறுசுறுப்பாக செயல்படும். இதன் காரணமாக நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருப்பதோடு நம் உடலின் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

அதிகாலை நேரம் விரைவாக எழுவதன் மூலம் மன அழுத்தம் குறையும். ஒரு நாள் செய்து முடிக்க வேண்டிய வேலைகள் அனைத்தையும் நம்மால் எளிதாக திட்டமிட முடியும். இதன் மூலம் நமக்கு ஏற்படும் தேவையில்லாத மன அழுத்தங்கள் தவிர்க்கப்படும். நம்முடைய வேலைகளை முடிக்கவும் எளிதாக இருக்கும்.

அதிகாலை நேரத்தில் எழுவதன் மூலம் தூய்மையான ஆக்சிஜனை  நம் நுரையீரல் பெறுவதற்கு உதவியாக இருக்கும். இதன் காரணமாக நுரையீரல் தொற்று, சைனஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். அதிகாலை நேரத்தில் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா செய்வது நம் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் நன்மை பயக்கும்.

அதிகாலை நேரத்தில் எழுவதால் குறித்த நேரத்தில் சிறுநீர் மற்றும் மலம் கழித்து  நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும். இதன் காரணமாக சிறுநீரகம், கல்லீரல் மற்றும் குடல் போன்ற உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.

அதிகாலை விரைவாக எழுவதன் மூலம்  உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியும். மேலும் அதிகாலையில் உடற்பயிற்சி செய்வதால் நல்ல ஈடுபாட்டுடன் உடற்பயிற்சியில் ஈடுபட முடியும்.

காலை உணவு சீக்கிரமாக எடுத்துக் கொள்வதன் மூலம் சர்க்கரை நோய் மற்றும் அஜீரணக் கோளாறு போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இயலும்.

மேலும் அதிகாலையில் சீக்கிரமாக எழும்போது இரவில் சீக்கிரமே உறக்கம் வந்துவிடும். இது மன அழுத்தம் ரத்த அழுத்தம் மற்றும் வளர்ச்சிதை மாற்றக் குறைவு போன்ற  நோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

five benefits of waking up early in the morning


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->