இந்த சமையல் குறிப்புகள் தெரிந்தால் நீங்கள் தான் கெத்து.! ஐந்து எளிமையான சமையல் குறிப்புகள்.!
Five easy recipes every women should know
வீட்டில் சாதம் வடிப்பதிலிருந்து சமையலறையை சுத்தமாக வைத்திருப்பது வரை அனைத்திலும் பெண்கள் தான் முதன்மையாக இருந்து செய்து வருகின்றனர். பெண்கள் சமையல் செய்யும்போது பின்பற்ற வேண்டிய சில எளிமையான மற்றும் முக்கியமான ஐந்து சமையல் குறிப்புகளை இந்த பதிவில் பார்ப்போம்.
சப்பாத்திக்கு மாவு உப்பு செய்வதற்கு முன்பாக மாவு பிசைய இருக்கும் பாத்திரத்தில் சுற்றிலும் எண்ணையை தடவுங்கள். பின்பு தண்ணீர் ஊற்றி அதில் மாவை போட்டு பிசையுங்கள். இவ்வாறு செய்யும் போது மாவு பாத்திரத்தில் ஒட்டாது. மாவு பிசைந்ததும் பாத்திரம் கழுவுவதற்கு எளிமையாக இருக்கும்.
இட்லி மாவை எடுத்து இட்லி ஊற்றுவதற்கு முன்பாக அதில் சிறிது நல்லெண்ணையை ஊற்றி நன்றாக கலந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு ஐந்து நிமிடம் கழித்து இட்லி சுடுங்கள். இவ்வாறு செய்யும்போது இட்லி பஞ்சு போல வருவதோடு நல்ல சுவையாகவும் இருக்கும்.
அவரைக்காய் மற்றும் பீன்ஸ் போன்ற காய்கறிகளை வேக வைக்கும் போது அதில் சிறிது அளவு தக்காளி சாறு அல்லது எலுமிச்சை சாறு பிழிந்து வேகவிட்டால் சீக்கிரமாக வெந்துவிடும்.
பொறித்த அப்பளம் மீந்து போய்விட்டால் அவற்றுடன் பச்சை மிளகாய் சிறிதளவு புளி, தேங்காய் துருவல் மற்றும் கருவேப்பிலை சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான அப்பள துவையல் ரெடி.
பூண்டு அல்லது வெங்காயம் உரிக்க சில நேரங்களில் சோம்பலாக இருக்கும். அப்போது பூண்டு மற்றும் வெங்காயத்தை சூடான தண்ணீரில் போட்டு உடனடியாக எடுத்து குளிர்ந்த நீரில் போடவும். இதன்பிறகு உரிக்க எளிமையாக இருக்கும்.
English Summary
Five easy recipes every women should know