பாத்ரூமில் இருக்கும் கரைகள் நீங்கி பளிச்சிட இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்போம். அதிலும் வீட்டிலிருக்கக்கூடிய கழிவறை சுத்தம் என்பது மிகவும் முக்கியமானது அசுத்தமான கழிவறைகளாலேயே பலவிதமான நோய்த் தொற்றுகள் ஏற்படுவதாக மருத்துவர்களும் சுகாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர். தினமும் ஒரு முறை நமது கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நம் கழிவறையை சுத்தம் செய்வதற்கான சில வழிகளை பார்ப்போம்.

டால்கம் பவுடர்:

உங்களது கழிவறை அதிக துர்நாற்றம் வீசினால் அதனை டால்க்கம் பவுடரை கொண்டு சுத்தம் செய்யலாம். கழிவறையில் டால்கம் பவுடரை கொட்டி விட்டு சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பின்னர் அதனை தேய்த்து கழுவலாம் அல்லது ஃப்ளஷ் அடிக்கலாம். இவ்வாறு தொடர்ந்து  மூன்று முதல் நான்கு நாட்கள் செய்யும் போது கழிவறையில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.

டூத் பேஸ்ட் :

டூத் பேஸ்ட்டை பயன்படுத்தினால் கழிவறையில் உள்ள கறைகள் எளிதில் நீங்கும். நம் கழிவறை மற்றும் வாஷ்பேஷன் ஆகியவற்றில் இருக்கும் கறைகளை நீக்க வாரம் ஒரு முறை டூத் பேஸ்டுடன்  சிறிதளவு பேக்கிங் சோடா சேர்த்து கழுவி வந்தால் கரைகள் முற்றிலுமாக நீங்கிவிடும்.

பாத்ரூம் கண்ணாடியை சுத்தம் செய்ய:

பாத்ரூமில் இருக்கும் கண்ணாடியை சுத்தம் செய்வதற்கு தண்ணீரும்  செய்தித்தாள்களுமே போதுமானது தண்ணீரை நன்றாக தெளித்து விட்டு  செய்தித்தாள்களை வைத்து அழுத்தி துடைத்தால் அவற்றில் இருக்கக்கூடிய கறைகள் மற்றும் அழுக்கு நீங்கி பளிச்சென்று மாறிவிடும்.

நம் பாத்ரூமில் இருக்கும் பக்கெட்டை சுத்தம்  செய்வதற்கு துணி துவைக்க பயன்படும் பவுடரை பயன்படுத்தலாம் இவற்றுடன் இனிப்பு சோடா மற்றும் வினிகர் சேர்த்து பயன்படுத்தும் போது பக்கத்தில் இருக்கும் நீரினால் ஏற்பட்ட கறைகள் மற்றும் பூஞ்சைகள் ஆகியவை  முற்றிலுமாக நீங்கி பளபளப்பாக மாறிவிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Follow these tips to get rid of stains on the toilet


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->