Freedom Fighter : முன்னோடிகளின் முன்னோடி.! இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்.! - Seithipunal
Seithipunal


முன்னோடிகளின் முன்னோடி:

இன்று உலகில் பெண் மருத்துவர்கள் ஏராளமானோர் இருந்தாலும்... இன்றுவரை அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த ஒரு பெண் மருத்துவர் இவர் என்றால் அது மிகையாகாது.

கல்வியாளர், அரசியல்வாதி, மருத்துவ நிபுணர், சீர்திருத்தவாதி என பன்முகத்திறமை கொண்டவர் இவர்.

அவர்தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி:

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி 1886ஆம் ஆண்டு ஜுலை 30ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில்; நாராயணசாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவருக்கு நான்கு வயதானபோது, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், முத்துலட்சுமி நன்றாகப் படித்து முதல் மாணவியாக திகழ்ந்ததால், தொடர்ந்து படிக்க வையுங்கள் என ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உயர்நிலை பள்ளிப்படிப்பை தொடர்ந்தார் முத்துலட்சுமி. முத்துலட்சுமி குடும்பத்தில் அவர் உட்பட அவரின் குடும்பத்தையும் ஆட்கொண்ட நோய்களை விரட்ட படிக்க வேண்டும் என்று சபதம் எடுத்தார். இதனால் படிப்பில் அதீத கவனம் செலுத்தினார். 

முத்துலட்சுமி அம்மையார், தனது 20வது வயதில் சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பைப் பயின்றார். மருத்துவ கல்லூரியில் ஆண்களோடு சேர்ந்து படித்த ஒரே ஒரு பெண் முத்துலட்சுமி அம்மையார்தான்.

1912ஆம் ஆண்டு முத்துலட்சுமி, இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக பட்டம் பெற்றபோது, 'சென்னை மருத்துவக்கல்லூரி வரலாற்றில் இது பொன்னான நாள்" என்று எழுதினார் பேராசிரியர் கர்னல் ஜிப்போர்டு.

திருமணம் :

முத்துலட்சுமி அம்மையார் 1914ல் மருத்துவம் படித்த பகுத்தறிவாளரான சுந்தரரெட்டியை தனது 28வது வயதில் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். 

முதல் சட்டமன்ற பெண் உறுப்பினர் :

அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்மூலம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். பின்னர் 1925ஆம் ஆண்டு சட்டசபை துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1930ல் உப்பு சத்தியாக்கிரகத்தின்போது காந்தியடிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தன் மேல்சபை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் முத்துலட்சுமி அம்மையார். 1933ல் அமெரிக்காவில் நடைபெற்ற பன்னாட்டு பெண்கள் கவுன்சில் மேடையில் இந்தியாவின் குரலை உலகம் அறிய செய்தார்.

முத்துலட்சுமி அம்மையாரின் சகோதரி புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவர் மற்றும் சகோதரி எனும் முறையில் அவரின் மரணம் வரை அவருடன் இருந்தார். அதனால் அவரது சகோதரின் வலி, வேதனைகள் புற்றுநோயினால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தையும் அறிந்தார். இனி எவரும் இந்நோயினால் பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணிய முத்துலட்சுமி அம்மையார் புற்றுநோய்க்கான மருத்துவமனையை துவங்கவேண்டும் என முடிவு செய்தார்.

சென்னை அடையாற்றில் இன்று ஆசியாவிலேயே புற்றுநோய் மருத்துவத்தில் புகழ்மிக்க ஒரு மருத்துவமனையாக இது திகழ்கிறது. இம்மருத்துவமனை டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மனித இனத்திற்கு விட்டுச்சென்றுள்ள மிகப்பெரிய சொத்து.

முத்துலட்சுமி; அம்மையாரின் மறைவு :

முத்துலட்சுமி; அம்மையார், தனது இறுதி நாட்கள் வரை சுறுசுறுப்புடனும், துடிப்புடனும் மக்களுக்கு சேவை புரிந்தார். புற்றுநோய்க்கு எதிராக பல போராட்டங்களை மருத்துவத்துறையில் நடத்தி வெற்றி கண்ட இவர் 1968ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 22ஆம் தேதி தனது 82வது வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Freedom Fighter dr muthulakshmi reddy history


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->