சுவையான ஃப்ரென்ச் ஃப்ரை வீட்டிலேயே செய்வது எப்படி.?!
French Fry in Home preparation
உருளைக்கிழங்கு ஃப்ரை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பத்தக்க ஒன்றாகும்.
அதுவும் உருளைக்கிழங்கு ஃப்ரென்ச் ஃப்ரை அல்லது ஃபிங்கர் சிப்ஸ் என்றால் கேட்கவா வேண்டும்??
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் ஃபிரென்ச் ஃப்ரைஸ் செய்வது எப்படி என்று பார்ப்போமா?
4 உருளைங்கிழங்கை தோள் சீவி எடுத்துக் கொள்ளவும்.
ஒரே அளவில் இருக்க வேண்டு வேண்டுமென்று நினைத்தால் உருளைக்கிழங்கின் மேலும் கீழும் வெட்டி தனியாக எடுத்துக்கொள்ளவும். முதலில் பட்டை பட்டையாக வெட்டினப் பிறகு நீள வாக்கில் வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
நல்ல கொதிக்கும் தண்ணீரில் கொஞ்சம் உப்பு போட்டு வெட்டி வைத்த உருளைக்கிழங்கை 5 நிமிடங்கள் போட்டு கொதிக்க விடவும்.
பிறகு அதை எடுத்து அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரை அகற்றிவிட வேண்டும்.
அடுப்பை பற்ற வைத்து கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் உருளைக்கிழங்குகளைப் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஃபிரீசரில் வைத்துக் கொண்டு எப்போது தேவையோ அப்போது நன்றாக கொதிக்கின்ற எண்ணெயில் பொறித்தெடுத்தால் நல்ல மொறு பொறுப்பான உருளைக்கிழங்கு ஃபிரன்ச் ஃப்ரைஸ் ரெடி.
English Summary
French Fry in Home preparation