சளிப்பிடித்தால், திராட்சை சாப்பிட வேண்டுமா.? மருத்துவர்கள் கூறும் முக்கிய அறிவுரை.!  - Seithipunal
Seithipunal


உடலில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி ஆரோக்கியமாக வைக்க உதவுவதில் திராட்சைக்கு பெரும்பங்கு இருக்கிறது. அந்த வகையில் திராட்சையின் நன்மைகள் குறித்து இன்று காணலாம்.

அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட பழங்களில் முதன்மையானது திராட்சைப்பழம். இந்த திராட்சை பழத்தில் வைட்டமின்கள் பி6, பி12, பி2, பி1 மற்றும் விட்டமின் சி உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இதன் காரணமாக உடலில் உள்ள வறட்சியை நீக்கி, உடலில் இருக்கும் பித்தத்தை குறைக்க உதவுகிறது. 

திராட்சை நரம்புகளுக்கு வலு கொடுத்து ரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும், கல்லீரல் பிரச்சனைகள், செரிமானக்கோளாறுகள் உள்ளிட்டவற்றை நீக்குகின்றது.

ஜலதோஷத்தினால் ஏற்படுகின்ற இருமல் தும்மல் உள்ளிட்டவற்றை குறைத்து குணப்படுத்த உதவுகிறது. பொதுவாக ஜலதோஷம் ஏற்பட்டால் நாம் திராட்சை சாப்பிடுவதை தவிர்த்து விடுவோம். ஆனால் திராட்சை சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நெஞ்சு சளியை போக்க திராட்சை பழச்சாறு ஒரு முக்கியமான மருந்து என்று கூறப்படுகிறது. ரத்தசோகை, மஞ்சள் காமாலை, வயிறு உப்புசம், ஜீரண கோளாறுகள், மாதவிடாய் பிரச்சினைகள், வயிறு வீக்கம், குடல் புண் மற்றும் உடல் களைப்பு உள்ளிட்டவற்றை நீக்க அன்றாடம் திராட்சை பழச்சாறு அருந்தி வரலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Graph Juice For cold problems


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->