சூப்பரான ரவுண்டான ஆஃப் பாயில் வீட்டிலேயே செய்யலாம்.! இப்படி டிரை பன்னுங்க.!  - Seithipunal
Seithipunal


அசைவம் விரும்பி சாப்பிடாத நபர்கள் கூட முட்டையை மட்டும் விரும்பி உண்பார்கள். அதுவும் சிலப்பேர் ஹோட்டல்களிலும், ரோட்டுக் கடைகளிலும் ஆஃப் பாயில் ஆர்டர் செய்து அது வந்ததும் சூடு ஆறுவதற்க்குள் அந்த நடுவில் உள்ள  மஞ்ச கரு உடையாமல் சுற்றி யுள்ள வெள்ளை கருவை லாவகமாகப் விரல்களால் பற்றி வாயில் போட்டு சுவைக்கும் அந்த நொடி ஏதோ சாதித்து விட்டது போல் அவர்களுக்கு தோன்றும். 

சில நேரம் அந்த மஞ்சள் கரு கலைந்து விட்டால் அந்த 'ஆஃப் பாயில்' சாப்பிட்ட திருப்தியே ஏற்படாது. வீட்டில் செய்யும் பொழுதும் இதேப் போல் சில சமயம் செய்யும் போதே மஞ்சள் கரு உடையக் கூடும். சரி ஏன் ஹோட்டல்களில் மட்டும்  இனி மேல் வீட்டிலேயே நல்ல ரவுண்டாக ஆஃப் பாயில் போடுவது எப்படி என்று சில டிப்ஸ் கள்:

முதலில் அடுப்பை பற்ற வைத்து  குறைந்த நெருப்பில் ஒரு நான் ஸ்டிக் பேனில்  எண்ணெய் அல்லது பட்டர் போட்டுக்கொள்ளவும், பிறகு ஒரு கோப்பையில் மஞ்சள் கரு உடையாமல் முட்டையை உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 'பேன்'லிருந்து இரண்டு இன்ச் அளவுக்கு  இடைவெளியில் முட்டையை மெதுவாக பேனில் நல்ல வட்டமாக வெள்ளைக் கருவை ஊற்றி பிறகு நடுவில் மெதுவாக மஞ்சள் கருவை ஊற்றும்  பொழுது மஞ்சள் கரு கலையாமல் நல்ல வட்டமாக இருக்கும். 

 ஒரு கோப்பையில் மஞ்சள் கரு உடையாமல் முட்டையை உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு காலியான சின்ன பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து முதலில் அழுத்தி பிடித்து வாய்ப்பகுதி மஞ்சள்கருவின் மேல் வைத்து விடுவித்தால் மஞ்சள் கரு மட்டும் அந்த பாட்டிலுக்குள் சென்று விடும். பிறகு பேனில் வெள்ளைக் கருவை வட்டமாக ஊற்றி நடுவில் பாட்டிலில் இருக்கும் மஞ்சள் கருவைப் போட வேண்டும்.

அடுத்தது ஒரு பிரட் ஸ்லைஸை  நடுவில் வட்டமான ஒரு கோப்பையைக் கொண்டு அழுத்தி நடுவில் உள்ள பிரட்டை எடுத்துவிட்டு சுற்றியுள்ளதை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அல்லது வெங்காயத்தை வட்டமாக அறுத்து உள்ளிருக்கும் சின்ன அடுக்குகளை எடுத்து விட்டு பெரிய வட்டத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பேனில் பிரட் அல்லது வெங்காயத்தை வைத்து அதனுள்  முட்டையை மெதுவாக  உடைத்து அந்த வட்டத்திற்குள் விழுகுமாறு  செய்தால் அழகாக ரவுண்டாக இருக்கும்.

பிறகு தேவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு மூடி வைத்துவிட வேண்டும். இரண்டு நிமிடங்களுக்கு பின் முட்டை வெந்ததும் பிறகு பேனிலிருந்து சற்றே சாய்த்து  நேராக ப்ளேட் க்கு மாற்றி விட்டால்.
இதோ நல்ல ரவுண்டானா 'ஆஃப் பாயில்'.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Half boil preparation at Home


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->