டீ டைம்க்கு ஹெல்தியான ஸ்னாக்ஸ் ப்ரோக்கோலி வடை! ரெஸிபி இதோ!
Healthy and crispy broccoli Vada receipe
டீ டைம்க்கு ஹெல்தியான ஸ்னாக்ஸ் ப்ரோக்கோலி வடை! ரெஸிபி இதோ!
தேவையான பொருட்கள்:
ப்ராக்கோலி - 1/4 கிலோ
கடலை பருப்பு - 1/4 கப்
துவரம் பருப்பு - 1/4 கப்
பாசிப் பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1
புதினா - 2 கைப்பிடி
வரமிளகாய் - 2
சோம்பு - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு , எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாசி பருப்பு நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ள வேண்டும்.
ஊறவைத்த பருப்புகளை தண்ணீர் இல்லாமல் தனியாக எடுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் சோம்பு, மற்றும் வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் புதினாவை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ப்ரக்கோலியை சுத்தம் செய்து சுடுதண்ணீரில் 5 நிமிடம் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை மிக்சி ஜாரில் சேர்த்து நறநறவென அரைத்து பருப்பு கலவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பருப்பு கலவையில் வெங்காயம், புதினா ,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு வாணலி வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின், கலந்து வைத்த மாவை வடை போல் தட்டி சூடான எண்ணெயில் மிதமான தீயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால் சத்தான சுவையான ப்ரோக்கோலி வடை ரெடி.
English Summary
Healthy and crispy broccoli Vada receipe