உடல்வலியை போக்கும்.. மட்டன் நெஞ்செலும்பு சூப் இப்படி செஞ்சு பாருங்க.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

நெஞ்செலும்பு  - 1/2  கிலோ 
பெரிய வெங்காயம்  -  2 
தக்காளி  -  2
சீரகம் - 3/4 டீஸ்பூன் 
மிளகு  - 1 டீ ஸ்பூன் 
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மல்லி இலை - 1/2 பிடி
உப்பு  - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன் 
இஞ்சி - ஒரு துண்டு
பெருஞ்சீரகம்  - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

மட்டன் நெஞ்செலும்பை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இஞ்சி மற்றும் பெருஞ்சீரகத்தை  ஒன்றில் பாதியாக  நன்றாகத் தட்டி வைக்கவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாக காய்ந்ததும் மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

வெங்காயம் மற்றும் தக்காளி நன்றாக வதங்கியதும் அதனுடன் மட்டன் நெஞ்செலும்பை சேர்த்து  ஐந்து நிமிடம் நன்றாக வதக்கவும். இப்போது அதில் உப்பு மற்றும் மஞ்சள் பொடி  சேர்த்து நன்றாக கிளறி விட்ட பின்  அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். குக்கரில் ஆறு விசில் வந்ததும்  மிதமான தீயில் 10 நிமிடம் வேக விடவும்.

கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை தட்டி வைத்துள்ள இஞ்சி பெருஞ்சீரகம் போட்டு தாளித்து அவற்றை குக்கரில் இருக்கின்ற சூப்புடன்  கலந்து பத்து நிமிடம் மிதமான சூட்டில் கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி இலைகளை அவற்றின் மீது தூவி இறக்கவும். உடலுக்கு வலு சேர்க்கும் சத்தான மட்டன் நெஞ்செலும்பு சூப் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy mutton rib soup receipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->