ஹோட்டல் சுவையில் குட்டீஸுக்கு பிடித்த பன்னீர் 65.! சூப்பரா செய்வது எப்படி.?!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் : 

பன்னீர் 200 கிராம்,

மைதா 3 ஸ்பூன்,

சோள மாவு 2 ஸ்பூன், 

பெப்பர் அரை ஸ்பூன், 

காஷ்மீர் மிளகாய்த்தூள் அரை ஸ்பூன், 

கரம் மசாலா அரை ஸ்பூன்,

சீரகத்தூள் கால் ஸ்பூன், 

மஞ்சள் தூள் கால் ஸ்பூன்,

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - அரை ஸ்பூன்,

தயிர் - 2 ஸ்பூன், 

லெமன் ஜூஸ் - ஒரு ஸ்பூன்,

உப்பு தேவையான அளவு 

செய்முறை : 

ஒரு கடாயில் ஒரு பவுலில் மைதா சோள மாவு, கரம் மசாலா, பெப்பர் தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், லெமன் ஜூஸ், உப்பு தேவையான அளவு  தண்ணீர் கலந்து பிசைந்து கொள்ளவும். 

பின்பு பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதில் போட்டு நன்றாக பிரட்டி எடுக்கவும்.

பின் கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் மசாலா கலந்த பன்னீரை எடுத்து எண்ணெயில் பொரித்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இப்பொழுது சூடான மொறு மொறு ஹோட்டல் சுவையில் பன்னீர் 65 தயார்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hotel style panneer 65 for Kutties 


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->