சபரிமலை புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

குறிப்பாக மார்கழி மாதத்தில் இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை விழாவிற்காக, கோவில் நடை கார்த்திகை மாதம் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். இந்த காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

பின்னர் மண்டல பூஜை முடிந்த உடன், கோவில் நடை அடைக்கப்பட்டு தை மாதமான மகரஜோதியின் போது கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். இந்த காலகட்டங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இதற்கிடையே, சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் மாளிகப்புரம் கோவிலில் மேல்சாந்தியாக பணியாற்றி வருபவர்களின் பணிக்காலம் வரும் நவம்பர்  மாதம் 15-ம் தேதியுடன் நிறைவடைவதை முன்னிட்டு, நேற்று சன்னிதானத்தில் புதிய மேல்சாந்தி தேர்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arunkumar namboothiri chosen as sabarimala new chief priest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->