உங்களுக்கு 'நிட்பிக்கிங்' செய்யும் பழக்கம் உள்ளதா..? உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளாவிட்டால் விரைவில் உங்கள் பார்ட்னரை பிரிய நேரிடும்..!! - Seithipunal
Seithipunal


உங்களுக்கு நிட்பிக்கிங் செய்யும் பழக்கம் இருந்தால், விரைவில் அதில் இருந்து விடுபட முயற்சி செய்யுங்கள், இல்லையென்றால் அதை விட விரைவில் உங்கள் பார்ட்னரை நீங்கள் பிரிய நேரிடும். 

முதலில் இந்த 'நிட்பிக்கிங்' என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம். எப்போதும் ஒருவருடைய நடத்தையோ, குணாதிசயங்களையோ, தோற்றத்தையோ காரணமே இல்லாமல் குறை கூறிக் கொண்டே இருப்பது. அதாவது கிண்டல், கேலி, விமர்சனம் என்று எப்படி வேண்டுமானாலும் இதை சொல்லலாம்.

ஒருவர்  'நிட்பிக்கிங்' பழக்கமுள்ளவரா என்று எப்படி தெரிந்து கொள்வது?

* வேறு யாருக்கும் எதுவுமே தெரியாது. எல்லாம் இவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்பது போல் நடந்து கொள்வார்கள்.

* சாதாரண விஷயத்திற்கு கூட வீணாக கோபப் படுவார்கள்.

* வேறு யார் எது செய்தாலும் அதில் ஒரு குறையைக் கண்டுபிடிப்பது.

* யாரேனும் எதிலேனும் தோற்றால், அதை தொடர்ந்து கிண்டல், கேலி செய்து கொண்டிருப்பது. 

* உதவி செய்கிறேன் என்று கூறிக் கொண்டு அவர்களை தேவையில்லாமல் மட்டம் தட்டுவது. 

இந்தப் பழக்கத்தில் இருந்து எப்படி வெளிவருவது?

இந்தப் பழக்கத்தில் இருந்து வெளிவருவது சுலபம் தான். ஆனால் அதற்கு முன்பாக இந்தப் பழக்கம் எப்படி வருகிறது? இதற்கான தூண்டுதல்கள் என்ன? என்பதைக் கண்டறிய வேண்டியது அவசியம். தனி நபர்களா, சூழ்நிலைகளா எது உங்களை இந்தப் பழக்கத்திற்குத் தூண்டுகிறது என்று கண்டறிந்தால் போதும்.

அடுத்து, ஒருவரைக் குறித்து குறை செல்லும்போதோ, அல்லது கிண்டல் செய்யும்போதோ அந்த இடத்தில் உங்களை வைத்துப் பாருங்கள். உங்களிடம் யாரேனும் இப்படி நடந்து கொண்டால் உங்களுக்கு அது என்ன உணர்வைக் கொடுக்கும் என்று நீங்கள் உணர்ந்து கொண்டாலே இந்தப் பழக்கத்தில் இருந்து எளிதில் விடுபடலாம். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To Become a Better Person By Stop Nitpicking


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->