இன்னும் சில மணிநேரங்களில் விடைபெறும் 2021 பிறக்கும் 2022ஆம் ஆண்டை எப்படி வரவேற்கலாம்? - Seithipunal
Seithipunal


ஆங்கிலப் புத்தாண்டை எப்படி வரவேற்கலாம்?

உலகம் முழுவதும் கொண்டாடும் ஒரு நிகழ்வு என்னவென்றால் அது ஆங்கிலப் புத்தாண்டுதான். வரும் ஆங்கிலப் புத்தாண்டை எப்படி வரவேற்க வேண்டும்? அந்த நேரத்தில் என்ன செய்யப் போகிறோம் என்பது முக்கியம் அல்லவா? அதைப் பற்றி இங்கு காண்போம்.

ஆங்கிலப் புத்தாண்டு :

 ஆங்கிலம், ஒரு மொழி என்பதையும் தாண்டி ஒரு அத்தியாவசியம் என்று ஆகிவிட்டது. ஆங்கில தேதிப்படியே இன்று பெரும்பாலான வர்த்தக, அலுவலக, தொழில் சார்ந்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சம்பளம் பெறுவது கூட ஆங்கில தேதிப்படியே நடக்கின்றது. எனவே ஆங்கிலமும், ஆங்கில தேதி முறைகளும் நம் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன. இப்படியெல்லாம் கூறுவதற்கு காரணம் வரும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்பதற்காகதான்.

புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் செய்யக்கூடியவை :

புத்தாண்டு பிறக்கும் நேரம், உங்கள் வீட்டில் சுவாமி படத்திற்கு முன்பு ஒரு ஜோடி விளக்கை ஏற்றி வையுங்கள். உடன் ஊதுபத்தியும் ஏற்றுங்கள்.

உங்களுக்கு பிடித்த சுவாமி பாடலை, ஸ்லோகத்தை, ஸ்தோத்திரத்தை படியுங்கள்.

உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் 5 நிமிடம் குடும்ப நலனும், ஒற்றுமையும், சுபிட்சமும் வேண்டி கூட்டுப் பிரார்த்தனை செய்யுங்கள். கூடவே நல்லோர் அனைவருக்கும் இந்த புத்தாண்டு இனிமையாக இருக்கவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் இனிப்பை கொடுத்து, இந்த வருடம் முழுக்க இனிப்பான செய்திகளை நான் உங்களுக்கு சொல்வேன். நீங்களும் எனக்கு சொல்லுங்கள் என்று கூறுங்கள்.

புது வருடத்தில் நீங்கள் அடையப்போகும் லட்சியத்தை பற்றிக்கூறி, அவர்கள் ஒத்துழைப்பையும், ஆசியையும் பெறுங்கள்.

புத்தாண்டு அன்று செய்யக்கூடியவை :

வீட்டில் பெற்றோர் மற்றும் மூத்தோரிடம் கால்களில் விழுந்து ஆசிப்பெற வேண்டும்.

ஏதேனும் ஒரு தொன்மையான ஆலயத்திற்கு சென்று இறைவனை தரிசனம் செய்யுங்கள். மார்கழி மாதம் என்பதால் பல கோவில்கள் சீக்கிரம் திறந்துவிடுவார்கள். எனவே அதிகாலை செல்வது சிறப்பாகும்.

உங்கள் வீட்டு பணியாளர்கள் மற்றும் உங்களுக்கு தெரிந்து சேவையில் ஈடுபடுகிறவர்களுக்கு பணமும், துணியும் கொடுங்கள். அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளை செய்யலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to celebrate 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->