பிரியாணி செய்யும் போது, ஒட்டாமல் உதிரி, உதிரியாக இருக்க..! - Seithipunal
Seithipunal


சமையல் டிப்ஸ்:

பிரியாணி செய்யும்போது ஒரு எலுமிச்சையைப் பிழிந்து விட்டால் சாதம் உதிரியாக இருக்கும்.

பச்சை மிளகாயில் உள்ள காம்பு பாகத்தை நீக்கி விட்டு அதை ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அந்த பச்சை மிளகாயை ஃப்ரெஷ்ஷாக பயன்படுத்தலாம்.

இஞ்சி உடன் ஏலக்காயை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து கொள்ளவும். டீ வைக்கும் போது இதை ஒரு டீஸ்பூன் அளவிற்கு போட்டு கொதி வந்த பின் பருகவும். இது சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

ஒரு கப் அளவு பாசிப் பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து காய்கறி சாலட் செய்யும்போது சேர்த்துக் கொள்ளுங்கள்.

சுவை நன்றாக இருக்கும். உடல் நலத்திற்கும் ஏற்றது.

பூசணிக்காய் மீந்துவிட்டால் அதை நறுக்கி சிறிது உப்பு சேர்த்து வேக வைத்தால் அடுத்த நாள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.

மோர்க் குழம்பு செய்யும் போது தேங்காய்க்கு பதிலாக கசகசாவை சேர்த்து அரைத்து மோர்க்குழம்பு செய்தால் சுவையாக இருக்கும்.

முட்டை கெடாமல் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்கு, அந்த முட்டையை குளிர்ந்த உப்பு தண்ணீரில் முழுகும்படியாக வைக்கவும். முட்டையானது முழுகாமல் மேலே வந்தால் அந்த முட்டை கெட்டு விட்டது. அது தண்ணீரில் மூழ்கினால் அந்த முட்டையை சமைப்பதற்கு பயன்படுத்தலாம்.

பொட்டுக்கடலை உருண்டை பிடிக்கும்போது வறுத்த வேர்க்கடலையும், பொடித்த முந்திரியையும் சேர்த்துப் பிடித்தால் சுவையாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to cook briyani as well


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->