கோடைகாலத்தில் ஏசியே தேவையில்லை.. கோடையில் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?
How to cooling house in summer season
கோடையில் வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருப்பது எப்படி?
வெளியே வெப்பம் குறைந்தாலும் வீட்டுக்குள் வெப்பம் குறைவதில்லை. பகலில் அடித்த வெயில் காரணமாக இரவில் வீட்டுக்குள் வெப்பம் அதிகமாக இருக்கும். இந்த வெப்பத்தின் தாக்குதலில் இருந்து வீட்டைப் பாதுகாப்பது எப்படி? வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க என்ன செய்யலாம்? போன்ற தகவல்களை பார்ப்போம்.
வீட்டின் மேற்கூரையிலிருந்துதான் வீட்டுக்குள் வெப்பம் இறங்கும். அதனால் வீட்டின் மேற்கூரையில் படும் வெயிலை குறைக்க வெள்ளை நிறத்திலான டைல்ஸை ஒட்டலாம். இதன் மூலம் வீட்டுக்குள் கடத்தப்படும் வெப்பத்தின் அளவை குறைக்க முடியும்.
வீட்டின் மேற்கூரைத் தளத்தில் வெள்ளை நிற பெயிண்ட் அடிக்கலாம். வெள்ளை நிறம் வெப்பத்தைக் கடத்தும் தன்மை அற்றது. அதனால் வீட்டுக்குள் வெப்பம் கடத்தப்படுவது குறையும்.
உங்கள் சீலிங் குளிர்ச்சியாக இருந்தால்தான் வீட்டில் வெப்பம் இறங்காது. அதற்கு மொட்டை மாடியில் தண்ணீர் தெளித்தால் சீலிங் குளிர்ச்சியாக இருக்கும்.
முன்பெல்லாம் மொட்டை மாடியின் மீது படும் வெயிலை குறைப்பதற்காக தென்னை மட்டைகளை வெட்டிப் போடுவார்கள். ஏனென்றால் தென்னை மட்டை வெயிலை உறிஞ்சிக் கொள்வதால், வீட்டுக்குள் வெயில் இறங்குவது குறையும். இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு ஓரளவு தான் பலன் கிடைக்கும்.
மேலும் வெயிலை குறைக்க வீட்டு மாடியில் தோட்டம் அமைப்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் வெயிலை செடிகள் உறிஞ்சு கொள்வதால் வீட்டுக்குள் வரும் வெப்பமும் குறையும். அதே நேரம் செடிகளும் வெயிலை உட்கொண்டு வளர்ச்சியடையும். இதனால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும்.
வீட்டினுள் அமைக்கப்படும் ஜன்னல் திரைகள் அடர் நிறத்தில் இருந்தால் அவற்றை மாற்றி வெளிர் நிறத்தில் உள்ள திரைகளை அமையுங்கள். இதனால் உங்கள் வீடு சற்றே குளிர்ச்சியானதாக மாறிவிடும்.
கோடைகாலத்தில் வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளை வளர்ப்பதன் மூலம் குளிர்ச்சியை உண்டாக்கும். பால்கனியில் மணி பிளாண்ட் போன்ற கொடிகளை வளர்க்கலாம். இதனால் வீட்டுக்குள் வரும் வெப்பக் காற்றின் தன்மை குறைய வாய்ப்புள்ளது.
வீட்டுக்குள் வரும் வெப்பத்தின் அளவைக் குறைக்க ஜன்னல்களில் நீர்த் திரைகள் அமைக்கலாம். மெல்லிய திரைகளில் லேசாக நீரைத் தெளிப்பதன் மூலம் காற்றின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடையும்.
கடுமையான வெயில் தாக்கம் இருந்தால் ஒரு பவுள் நிறைய ஐஸ் கட்டிகளை நிரப்பி அதை டேபிள் ஃபேன் முன் வைத்தால் ஏசி போல் சில்லென காற்று வீசும்.
வெளிக்காற்று உள்ளே வருமாறு கதவுகள் மற்றும் ஜன்னல்களைத் திறந்து வையுங்கள். அதேசமயம் வீட்டில் இருக்கும் வெப்பமும் வெளியேறும். மாலை நேரத்திலும் கதவைத் திறந்து வைத்தால் குளிர்சியான காற்று வீட்டை கூலாக்கும்.
வீட்டில் பல்பு தேவையில்லாமல் எரிந்தாலோ, கணினி, ஃபிரிஜ் என மின் சாதனப் பொருட்கள் தேவையில்லாமல் ஓடிக் கொண்டிருந்தாலோ அதை அனைத்து விடுங்கள். இவை வெப்பத்தை உண்டாக்கக்கூடியவை.
குறிப்பு :
கோடைகாலத்தில் வீட்டை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக கழிவறையை சுத்தம் செய்வது மிக அவசியம். அதுபோல வீட்டில் பூச்சி தொல்லைகளும் அதிகமாகும். அதையும் கவனித்து சரி செய்ய வேண்டும்.
English Summary
How to cooling house in summer season