உடலுக்கு அனைத்து சத்துகளும் கிடைக்க வேண்டுமா? காய்கறிகளை இப்படி சமைத்து சாப்பிடுங்கள்.?
How to eat vegetables
காய்கறிகளை அதிகம் சாப்பிட்டால் எந்த நோய்களும் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம் என்று முன்னோர்களும், மருத்துவர்களும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதற்கு சில வழிமுறைகளை பின்பற்றி சாப்பிட வேண்டும்.
தற்போதைய நவீன காலத்தில் காய்கறிகள் ரசாயன உரங்களால் விளைவிக்கப்படுவதால் காய்கறிகளை 20 நிமிடங்கள் தண்ணீரில் நன்றாக கழுவ வேண்டும். அப்போதுதான் காய்கறிகளின் தோலில் உள்ள ரசாயனங்கள் விலகும்.
மேலும் காய்கறிகளை நறுக்குவதற்கு முன்பே கழுவ வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நீர் சத்து அதிகம் உள்ள காய்கறிகளை 5 நிமிடங்கள் மட்டுமே வேக வைத்தால் போதும்.
மேலும் காய்கறிகளை எண்ணெயில் வதக்கி சாப்பிட்டால் அனைத்து சத்துக்களும் கிடைக்காது. அதனால் வதைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் முட்டைக்கோஸ் தேங்காய் வெள்ளரிக்காய் தக்காளி கேரட் போன்ற காய்கறிகளை சமைக்காமல் பச்சையாக சாப்பிட்டால் அதிக சத்துக்கள் கிடைக்கும்.
மேலும் சமைக்க வேண்டிய காய்கறிகளை தேவையான அளவு தண்ணீரில் வேக வைத்து அதன் பின் அந்த தண்ணீரை வீணாக்காமல் உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது.