பூவுக்குள் தேன் இருப்பதை வண்டுகள் கண்டுபிடிப்பது எவ்வாறு.?! - Seithipunal
Seithipunal


சில தேன் எடுக்கும் பூச்சிகள், வண்டுகளுக்கு மோப்ப சக்தி இருக்காது. அதே வேளை பூவுக்குள் இருக்கும் தேனுக்கும் அதிக மணம் கிடையாது. இப்படி இருக்க வண்டுகள் தேனைக் கண்டுபிடிப்பது எப்படியென்றால், அதன் கண்கள் இதற்கு உதவுகின்றன.

பூவின் இதழ்களுக்குள் மறைந்திருக்கும் தேனை நம் கண்களுக்குக் கூட தெரியாத நிலையில் வண்டுகள் சுலபமாக கண்டுகொள்வது சாத்தியம், அதன் கண்கள் அல்ட்ரா வயலட்டை உணரும் வகையில் இருப்பது தான். மனிதனுக்கு இயற்கை ஐம்புலன்களை அளித்துள்ளது. பார்த்தல், கேட்டல், தொடுதல், முகர்தல், நுகர்தல் போன்றவைதான் அவை. இவை அளவோடு நமக்கு அமைந்துள்ளன.

ஏறவே முடியாத மலையின் உயரத்தை அளப்பது எப்படி?

மனிதனால் ஏறவே முடியாத அளவுக்கு உயரமான மலைகளும் உள்ளன. மனிதன் சர்வசாதாரணமாக ஏறித் திரியும் மலைகளும் உள்ளன. ஆனால் எல்லா மலைகளின் உயரத்தையும் துல்லியமாகத் தெரிவிக்கிறார்களே, அது எப்படி? பூமிப்பரப்பில் இருந்து மலையின் உச்சி வரை 'டேப்' வைத்து அளக்கிறார்களா என்ன? பூமியின் பரப்பைக் கணக்கிடுவதற்கு மிகப் பழைய முறைகள் உண்டு. அவை பலவகைப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர். அம்முறைக்கு, 'முக்கோணமாக்கல்' என்று பெயர்.

கணக்கில் ஜியாமெட்ரி பாடங்கள் படிக்கும்போது முக்கோணத்தின் ஒரு பக்கத்தின் நீளம், கோணம் ஆகியவற்றைக் கொடுத்து மற்ற இரு பக்கங்களின் அளவுகளை கண்டுபிடிப்போமே அந்த முறைதான் பூமியின் பரப்பு பற்றிய கணக்கீடுகளுக்கும் பயன்படுகிறது.

ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நிலமோ அல்லது ஆயிரம் ஏக்கர் நிலமோ, அளவிடும் முறை ஒன்றுதான். ஒரு சங்கிலி, கம்பி அல்லது கழி வைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட பக்கத்தை அளந்துகொண்டு, அதை ஒரு முக்கோணத்தின் ஒரு பக்கமாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இருபக்க முக்கோணங்களையும் கணக்கிட வேண்டும்.

இவ்வாறு ஒரு முக்கோணத்தின் பரப்பு கணக்கிடப்பட்டதும், மொத்தப் பரப்பையும் பல முக்கோணங்களாக்கிக் கணக்கிட முடியும். இவ்வாறு கோணங்களைக் கணக்கிட உதவும் கருவிக்கு 'டிரான்சிட்" என்று பெயர். இந்தக் கருவியை வைத்து செங்குத்தாகவும் கணக்கிட முடிவதால், மலை உச்சிகளின் உயரத்தையும் கணக்கிட முடிகிறது.

இதற்கு சமப்பரப்பு முறையில் கணக்கிட வேண்டும். அதாவது இந்த டிரான்சிட் கருவியில் சமப் பரப்பைக் குறியிட்டுக் காட்ட ஒரு ஸ்பிரிட் முனை உள்ளது. இந்தச் சமப் பரப்பைக் கணக்கிட்டு முதலில் முக்கோணத்தின் ஒரு பக்கமாக வைத்துக்கொள்வோம்.

பிறகு டிரான்சிட் கருவியின் மூலம் நம் பார்வையை ஒரு கோணத்தில் வைத்துக்கொண்டு மலையுச்சியைப் பார்க்க வேண்டும். இப்போது கோணத்தையும் கணக்கிட்டுக் கொண்டால், ஏற்கனவே சொன்னபடி முக்கோண முறைக்கு வழி கிடைத்துவிடும். இவ்வாறு மலையின் உயரத்தைக் கணக்கிட்டு விடலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to find honey flower


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->