மழைக் காலங்களில் துணிகளில் வீசும் துர்நாற்றம்.. சரி செய்வது எப்படி..?! - Seithipunal
Seithipunal



மழைக் காலங்களில் துணிகளை துவைப்பதும், அதை காய வைப்பதும் தான் பெரும் பாடாக இருக்கும். அப்படி சரியாத காயாத துணிகளில் இருந்து ஒரு விதமான துர்நாற்றம் வீசும். இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உண்டு. 

மேலும் இதனால் நமக்கு ஏதேனும் தொற்று ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. எனவே மழைக் காலங்களில் துணிகளை சுத்தமாகவும், உலர்வாகவும், துர்நாற்றம் இல்லாமலும் வைத்திருக்க கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றி பார்க்கலாம். 

துணிகளை சுத்தமாகவும், துர்நாற்றம் அற்றதாகவும் வைத்திருக்க தரமான டிடர்ஜண்ட் பவுடர் மற்றும் சோப்புகளை பயன்படுத்த வேண்டும். இவை துணிகளை வாசனையாக வைத்திருக்க உதவும். மேலும் ரசாயனம் அதிகம் கலந்த சோப்புகளை தவிர்க்க வேண்டும். 

மேலும் துணிகளில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க துணி வைக்கும் அலமாரிகளில் நாப்தலின் உருண்டைகளை வாங்கி வைக்க வேண்டும். இந்த உருண்டைகள் காற்றில் இருக்கும் ஈரப் பதத்தை உறிஞ்சுவதோடு, துணிகளையும் நறுமணமாக வைத்திருக்கும். 

ஈரமான துணிகளை அப்படியே மடித்து வைத்தால் கிருமிகள் தொற்றும் வாய்ப்பு அதிகரிக்கும். எனவே துணிகளை மடிப்பதற்கு முன் லேசான ஈரப்பதத்தோடு இருக்கும் துணிகளை அயர்ன் செய்து பின்னர் மடித்து, அலமாரிகளில் வைக்கலாம். மேலும் துணிகளை அலசும் போது வாசம் தரக்கூடிய பேப்ரிக் கண்டிஷனர்களை உபயோகிப்பதன் மூலம் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். மேலும் துணிகளின் அளவிற்கு ஏற்ப இந்த வாசனை  கண்டிஷனர்களை உபயோகிக்க வேண்டும். அளவு அதிகமானால் தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To Keep Fresh Your Clothes in Rainy Season


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->