உங்கள் வீட்டு சமையலறையை வாசனையாகவும், புத்துணர்வாக வைக்கவும்.... இதோ சில டிப்ஸ்.! - Seithipunal
Seithipunal


நம் வீடானது நன்கு சுத்தமாக ஆரோக்கியமான சூழ்நிலையுடன் புத்துணர்வான நறுமணத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவோம். ஆனால் அன்றாடம் வேலைகள் நடக்கும் சமையலறையில்  நாம் பயன்படுத்தும் பொருட்களின் காரணமாக துர்நாற்றம் வீசும். இதனை நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எவ்வாறு போக்குவது என்று பார்ப்போம்.

நாம் பூஜை போன்ற வழிபாடுகளுக்கு பயன்படுத்தும் கற்பூரத்தை ஒரு துணியில் கட்டி கிச்சன் மூளைகளில் வைப்பதன் மூலம் அங்கு இருக்கும் துர்நாற்றத்தை அகற்றலாம். இது நல்ல நறுமணத்தை கொடுப்பதோடு புத்துணர்வான உணர்வையும் கொடுக்கும்.

கிச்சனில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க மற்றும் ஒரு சிறந்த வழி நறுமண  ஆயில்களை பயன்படுத்துவது ஆகும்.  நாம் சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய நறுமணப் பொருட்களை ஒரு சிறிய காட்டன் பஞ்சில் நனைத்து அவற்றை நம் சமையலறையின் மூலைகளில் வைப்பதன் மூலம் கிச்சனில் இருக்கும் துர்நாற்றத்தை போக்கலாம்.

நாம் சமையலுக்கு பயன்படுத்தும் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கரைத்து ஸ்ப்ரே செய்வதன் மூலம் கிச்சனை துர்நாற்றம் இல்லாமல் புத்துணருடன் வைக்க ஒரு சிறந்த வழியாகும்.

நாம் சமையலறையில் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் மல்லி ரோஜா போன்ற மலர்களை பரப்பி வைப்பதன் மூலம்  பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு நல்ல நறுமணத்தையும் கொடுக்கும். மேலும் இது ஒரு புத்துணர்வான உணர்வையும் தரக்கூடியது.

எலுமிச்சை பழத்தின் தோல் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி  ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி ஸ்ப்ரே செய்து வருவதன் மூலம் நமது சமையலறையை  துர்நாற்றமில்லாமல் நறுமணத்தோடு வைத்துக் கொள்ள உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to keep the kitchen smell free with household items


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->