'ஜிம்' போயிட்டு வந்து 'டயர்டா' இருக்கீங்களா? அப்போ இதோ உங்களுக்கான ஹோம் மேட் ப்ரோட்டீன் ஷேக்! - Seithipunal
Seithipunal


நாம் ஜிம் மற்றும் உடற்பயிற்சி முடித்த பின்பு  உடல் ஆரோக்கியத்திற்காகவும் உடற்பயிற்சியின் போது செலவழித்த சக்தியை திரும்ப பெறவும் மில்க் ஷேக் அல்லது போலச்சாறு ஏதேனும் ஒன்று குடிப்போம். அதையும் வீட்டிலேயே தயாரித்து அதிக புரோட்டினுள்ள மில்க் ஷேக் எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்?

தேவையான பொருட்கள் ;
வாழைப்பழம்  - 1
ஓட்ஸ்                     - 50  கிராம் 
பால்                       - 100 மில்லி  
பாதாம்                   -10  கிராம் 
பிஸ்தா                 - qp  கிராம் 
வால்நட்                - 10  கிராம்

செய்முறை:

வாழைப் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி  மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் 100 மில்லி லிட்டர் பாலை ஊற்றி,  10 கிராம் பாதாம், 10 கிராம் பிஸ்தா மற்றும் 10 கிராம் வால்நட்  ஆகியவற்றை இளஞ்சூட்டில் வறுத்து பொடி செய்து அந்தப் பொடியை இதனுடன் சேர்த்து இவற்றுடன் 50 கிராம் ஓட்ஸ் சேர்த்து நன்றாக அரைக்கவும். இவை அனைத்தும் நன்றாக அரைத்து இவற்றை கிளாசில் ஊற்றி  குடிக்கலாம். 

இது உடற்பயிற்சி முடித்து வந்தவுடன் குடிக்கக்கூடிய ஒரு மிகச் சிறந்த பானம் ஆகும். கார்போஹைட்ரேட் நல்ல கொழுப்புகள், புரோட்டீன் என அனைத்து ஊட்டச்சத்துகளும் சம அளவில் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make a healthy post workout homemade protein shake at home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->