சத்தான மற்றும் சுவையான ராகி உருண்டை.! இதோ ஈஸி ரெஸிபி.!
How to Make Nutritious and Delicious Ragi Balls
சத்தான மற்றும் சுவையான குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய ராகி உருண்டை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
வறுத்த வேர்க்கடலை - 50 கிராம்
வெல்லம் - சுவைக்கேற்ப
உப்பு - 1 பின்ச்
செய்முறை :
ராகி மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு பின்ச் அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடை பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.
ராகி மாவை எடுத்து அடை போல தட்டி தோசை கல்லில் போட்டு எடுக்கவும். எடுத்தவுடன் அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இப்போது வெல்லத்தையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பொடி செய்து கொள்ளவும்.
இதனையும் பிச்சிப்போட்ட ராகி மாவுடன் சேர்த்து நன்றாக பிசைந்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். சுவையான மற்றும் சத்தான ராகி உருண்டை ரெடி.!
English Summary
How to Make Nutritious and Delicious Ragi Balls