குடல் பிரச்சனைகளை சரிசெய்யும் சுண்டைக்காயில் சூப்பரான சூப்.!  - Seithipunal
Seithipunal


சுண்டைக்காயில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்த தகவலை நாம் அறிவோம். அந்த வகையில்., சுண்டைக்காயை மோரில் ஊற வைத்து சாதத்திற்கு வைத்து சாப்பிட்டும் இருப்போம். அதனைப்போன்று சுண்டைக்காய் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் நமது வயிற்றில் இருக்கும் கிருமிகள் அழிந்து நமது உடலை பாதுகாக்கும்.

தேவையான பொருட்கள்: 

பச்சை சுண்டைக்காய் - 50 கிராம்.,

வேக வைத்த பாசிப்பருப்பு தண்ணீர் - 1 கப்,

தக்காளி, வெங்காயம் - 1,  

எலுமிச்சைச் சாறு - 1 தே.கரண்டி,

பச்சை மிளகாய் - 1, 

எண்ணெய் - 1 தே.கரண்டி.,

மிளகு - சீரகப்பொடி - சிறிதளவு.,

உப்பு - தே. அளவு.

செய்முறை:

தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பச்சை சுண்டைக்காயை நன்கு கழுவி, பின்னர் நசுக்கி வைத்து கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அனைத்தும் நன்றாக வதங்கியபிறது, சுண்டைக்காயை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும். 

பிறகு, உப்பு, பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, மிளகு, சீரகப்பொடி, எலுமிச்சைச் சாறு சேர்த்துக்  கலக்கவும்.

பிறகு சுவையான சுண்டைக்காய் சூப் ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare sundaikkai soup in tamill


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->