எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா.? இந்த உணவுகளை சாப்பிட்டால் போதும்.! - Seithipunal
Seithipunal


ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 30 வயதிற்கு பிறகு உடல் உறுப்புகளின் செயல்பாட்டின் வேகம் குறைய ஆரம்பித்து விடுகிறது. அதேபோல் முதுமையின் தாக்கம் மெதுவாக தோன்ற தொடங்குகிறது.

அதன் அறிகுறியாக தலைமுடி நரைத்தல், தோளில் சுருக்கங்கள், கை கால்களில் வலி, கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் மட்டுமின்றி இதய நோய், சர்க்கரை நோய் போன்ற நோய்களின் அபாயமும் ஏற்படுகிறது.

அதற்குக் காரணம் வயதாகும்போது உடலில் குறைந்த அளவு கொலாஜனை உற்பத்தி செய்கிறது. இதனால் உடலின் கட்டமைப்பு மாறி சுருக்கங்கள் உருவாகின்றன. மேலும் கை கால்கள் பலவீனமடைந்து எலும்புகள் தசைகள் பலவீனம் அடைகிறது. இதில் எந்தெந்த உணவுகளை நாம் சாப்பிட்டால் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கலாம் என்பதை இந்த பதிவில் நாம் காணலாம்.

உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவும் அமினோ அமிலங்கள், துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்களின் சக்தி வாய்ந்த உணவுப் பொருளாக மீன் உள்ளது. அனைத்து வகையான மீன்களிலும் சில வகை இறைச்சிகளிலும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பதால், உடலை இளமையாக வைத்திருக்க முடியும். மீன் உணவுகள் மூலம் ஆரோக்கியமான இளமையான சருமத்தை பராமரிக்கலாம்.

குறிப்பாக நமது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச் சத்துக்களையும் கொண்டது பச்சை இலை காய்கறிகள்.  அதன்படி கீரை, முட்டைக்கோஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளை சாப்பிட்டால் அதிக அளவு கொலாஜன் உற்பத்தி செய்கிறது. இதன் மூலம் உடலை இளமையாக வைத்திருக்க முடியும்.

எலுமிச்சை மற்றும் மேலும் சில சிட்ரஸ் பழங்களில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் இந்த வகை பழங்களை சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலுக்கு தேவையான ஊட்டத்தை கொடுக்கிறது.

உணவு மட்டுமில்லாமல் நமது ஒரு சில பழக்க வழக்கங்களும் உடலை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. அதன்படி மிக முக்கியமானது சூரிய ஒளி. சூரிய ஒளி ஆற்றலில் இருந்து நமக்கு கிடைக்கும் வைட்டமின் டி உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்து கொடுக்கிறது. ஆனால் வெயிலில் அதிக நேரம் செலவிட்டாலும் அது உங்கள் சருமத்தை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to young body maintain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->