இந்த கோடை வெயிலில்... உங்க சருமத்தை பாதுகாக்க இதோ சில டிப்ஸ்! - Seithipunal
Seithipunal


கோடை காலத்தில் நமது சருமம் கடுமையான வெயில் மற்றும்  உலர்தன்மையின் காரணமாக பாதிக்கப்படும்.  இந்த பாதிப்புகளிலலிருந்து நமது சருமத்தை எவ்வாறு பாதுகாக்கலாம் என்று பார்ப்போம்.

கோடை காலத்தில் நமது சருமத்தின் வளர்ச்சியை போக்குவதற்கும் சருமத்தை கிருமி போன்ற தொற்றுகளிலிருந்து பாதுகாக்கவும் இரண்டு முறை குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் காலை மற்றும் மாலை என இரண்டு வேலைகளும் குளிப்பதால் நமது உடல் மற்றும் முகங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி  கிருமி தொற்றுகளில் இருந்து தடுக்கப்படுகிறது மேலும் உடலானது குளிர்ச்சி அடைகிறது.

கோடைகாலங்களில் நமது சருமத்தை பாதுகாப்பதற்கு மற்றும் ஒரு வழி  தேவையான அளவு நீர் அருந்துவது ஆகும். நாம் வீட்டில் இருந்தாலும் அல்லது வெளியே சென்றாலும் ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் வீதம் தண்ணீர் குடித்து வரும்போது நமது உடல் நீர் ஏற்றத்துடன் இருப்பதால் சரும வளர்ச்சி பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

கோடை காலங்களில் நாம் வெளியே செல்லும்போது சூரியனிலிருந்து நமது சருமத்தை பாதுகாத்துக் கொள்ள சன் ஸ்கிரீன் பயன்படுத்தலாம். ஆடைகள் மறைக்காத கை முகம் மற்றும் கழுத்து போன்றவற்றில் சன் ஸ்கிரீன் பயன்படுத்துவதன் மூலம் சூரிய ஒளியை நேரடி பாதிப்பிலிருந்து நமது சருமத்தை பாதுகாத்துக் கொள்ளலாம்.

கோடை காலத்தில் இருக்கும் அதிக அளவு வெயிலானது  நம் உடலை வெப்பமடைய செய்து சருமத்தின் தன்மையை மாற்றி விடும். இதன் காரணமாக நமது சருமம் எண்ணெய் பிசுபிசுப்புடன் இருக்கும். இதனை தவிர்த்துக் கொள்ள  மாஸ்டரைசர் கிரீம்களை பயன்படுத்தலாம். இந்த மாய்ஸ்டரைசர் கிரீம்கள் அதிகப்படியான வெப்பத்தினால் நமது சருமம்  வெப்பமடையாமல் பாதுகாக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IHere are some tips to protect our skin from the effects of summer sun


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->