உங்கள் முகம் மாசு மருவின்றி மின்ன வேண்டுமா.? அப்போ இந்த ஜூஸ் செஞ்சு குடிங்க.! - Seithipunal
Seithipunal


சருமம் பொலிவுடன் இருப்பதை நாம் அனைவரும் விரும்புவோம். நமது முகத்திற்கு அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதன் மூலமாக மட்டுமே கிடைத்துவிடாது. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை சரியான அளவில் கிடைக்கும் போது நமது சருமம் பொலிவு பெறும். சருமத்தின் அழகை பொலிவுடன் வைக்க உதவும்  ஜூஸ் எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

கொத்தமல்லி இலை - 1  கப் 
எலுமிச்சை சாறு - 1  ஸ்பூன்  
தண்ணீர்  - 1  கப் 
கருப்பு உப்பு / சாட் மசாலா  - 1  பின்ச் 

செய்முறை:

மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலை மற்றும்  எலுமிச்சை சாறு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும். அவை நன்றாக அரைத்து  ஜூஸ் பதம் வந்ததும் அதனை வடிகட்டியும் பயன்படுத்தலாம் அல்லது வடிகட்டாமலும் பயன்படுத்தலாம் இதனுடன் கருப்பு உப்பு அல்லது சாட் மசாலா,ஒரு பின்ச் அளவு சேர்த்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

இந்த ஜூஸின் நன்மைகள்:

கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு  நம் சருமங்களில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது. இது சருமத்தின் துவாரங்களில் ஊடுருவி சென்று இறந்த செல்களை நீக்கி முகத்தின் பொலிவை பராமரிக்க உதவுகிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய ஆண்டிபயாட்டிக் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் முகப்பருக்கள் வராமல் இருக்க உதவுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Juice recipe to keep skin glowing


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->