மசூதிகளில் பணி புரியும் இமாம்களுக்கு நிதி உதவி..MLA அனிபால் கென்னடி வழங்கினார்!
Financial assistance to imams working in mosques. Presented by MLA Anibal Kennedy
புதுச்சேரி உப்பளம் மசூதிகளில் பணி புரியும் இமாம்களுக்கு நிதி உதவி அனிபால் கென்னடி எம்எல்ஏ வழங்கினார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதி திமுக அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் மசூதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு இமாமுக்கும் ரூ.10,000 மதிப்பிலான காசோலைகளும், ஒவ்வொரு மோசினுக்கு ரூ.5,000 மதிப்பிலான காசோலைகளும் தொகுதி திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி வழங்கினார் மொத்தமாக 10 பயனாளிகள் இத்தொகையை காசோலையாக பெற்றனர்.
இத்தொடர்பாக பேசிய உப்பளம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள், , “மத நல் இனக்கதுடன் இன்று போல் ஒற்றுமையாக இருப்போம். சமூக ஒற்றுமையும் சகோதரத்துவதுடன் வாழ்வோம் என்று வாழ்த்துகளை தெரிவித்தார், இதில் பயன் பெற்ற பள்ளி வாசல்கள்; நிர்வாகக் குழு, குத்பா பள்ளி டிஜாமியா மஸ்ஜித்,மொஹம்மதியா மசூதி, முவஹாதியா மசூதி, அஹமதியா பள்ளி, மீரப்பள்ளி மசூதி ஆகும் உடன் தொகுதி துணை செயலாளர் நிசார், கிளை செயலாளர்கள் அன்வார், பாபு ரகுமான், ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

English Summary
Financial assistance to imams working in mosques. Presented by MLA Anibal Kennedy