காரசாரமான காடை மிளகு வறுவல் சூப்பராக செய்வது எப்படி.?!
Kaadai varuval preparation in Tamil
தேவையான பொருட்கள் :
காடை - 5 எண்ணிக்கை
பெரிய வெங்காயம் - 5
தக்காளி - 3
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 3
ஏலக்காய் - 3
மிளகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் மற்றும்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வாணலியில் மிதமான சூட்டில் 3 தேக்கரண்டி மிளகு 1தேக்கரண்டி சீரகம் சேர்த்து 3 நிமிடங்கள் வரை வறுக்க வேண்டும். இதனை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
வாணலியில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்த உடன் எடுத்து வைத்த பிரிஞ்சி இலை, சீரகம், சோம்பு, மிளகு மற்றும் காய்ந்த மிளகாய் 5 ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
அதனுடன் காடையை சேர்த்து வறுத்து பொடி செய்த மசாலாவை 3 தேக்கரண்டி சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
அதனுடன் தேவைக்கேற்ப மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து
நன்றாக காடையில் மசாலா படும் படி கிளறி விட்டு 20 நிமிடங்கள் காடையை வேக விட வேண்டும்.
காடையில் இருந்து தண்ணீர் வெளியேறும் நிலையில் மீதி பொடி செய்த மசாலாவையும் சேர்த்து 5 நிமிடங்கள் தண்ணீரை வற்ற விட்டு கொத்தமல்லி தழையை தூவி இறக்க உங்கள் சுவைக்கு ருசி சேர்க்கும் காடை வறுவல் ரெடி.
English Summary
Kaadai varuval preparation in Tamil