நீங்க ஹெல்த்தி ஃபுட் ட்ரை பண்ணனுமா...? அப்போ சாமை நூடுல்ஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க...!
like to try healthy food try making foxtail millet noodles
சாமை நூடுல்ஸ் .... இது ஒரு ஹெல்த்தி வேர்ஷன் சமையாலா இருக்கும் .இந்தக் கோடைக்காலத்துல சத்தான உணவு குழந்தைகளுக்கு மிக முக்கியம் .
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
சாமை அரிசி 5 கப்
வெங்காயம் 2 (நறுக்கியது)
தக்காளி 2
குடமிளகாய் 2
முட்டை கோஸ் சிறிதளவு
பச்சை மிளகாய் 3
எண்ணெய் 4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடி சிறிதளவு
உப்பு தேவையான அளவு

செய்முறை :
சாமை நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் சாமை அரிசியை 3 மணி நேரம் ஊறவைத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அரைக்கும்போது அதில் சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கவும். பிறகு வாணலியை கேஸ் ஸ்டவ்வில் வைத்து மாவை ஊற்றி, அதில் எண்ணெயை ஊற்றி கிளறவும். பிறகு மாவு நிறம் மாறிக் கையில் ஒட்டாமல் பந்துபோல வரும்போது இறக்கவும். அதைச் சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் வேகவைத்து சூடாக இருக்கும்போதே இடியாப்ப அச்சில் போட்டுப் பிழிந்து வைக்கவும்.பிறகு வாணலியில் எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன், அதில் மெலிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், முட்டைகோஸ், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, அதில் சிறிது கரம் மசாலா பொடியைத் தூவி, பிழிந்து வைத்திருக்கும் சாமையைப் போட்டு கிளறவும். சுவையான சாமை நூடுல்ஸ் தயார்.
English Summary
like to try healthy food try making foxtail millet noodles