அசைவ உணவுகளை விட ஊட்டச்சத்து நிறைந்த 5 காய்கறிகள்.! - Seithipunal
Seithipunal


அசைவ உணவை விட அதிக ஊட்டச்சத்து நிறைந்த சைவ உணவுகள் என்னென்ன என்பதை நாம் இந்த பதிவில் காணலாம்.

வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அதிக நன்மை கொடுக்கிறது. அந்த வகையில் வாழைப்பழம் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படுகிறது. புரதம், நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளதால் உடலில் பல நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது.

டோஃபு என்பது சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருளாகும். இதில் புரத சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் வைட்டமின் ஏ, இரும்பு, தாமிரம், நார்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற ஏராளமான சத்துக்களும் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பழங்கள் மற்றும் பச்சை காய்கறிகள் ஆரோக்கியத்திற்கு நன்மை கொடுக்கிறது. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் உடைய ஆப்பிள் பழத்தில் வைட்டமின் சி, நார்ச்சத்து, வைட்டமின் கே, தாமிரம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளது. ஆப்பிளை தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சோயாபீன் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் இதில் உள்ள நார்சத்து, புரதம், இரும்பு சத்து, கார்போஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உடலை பாதுகாக்கிறது. தினமும் காலையில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.

பீட்ரூட் காய்கறிகளில் சிறந்த உணவுப் பொருளாக பயன்படுகிறது. அந்த வகையில் பீட்ரூட்டில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

More Nutrition vegetable foods


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->