குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்ற.. ராகி பால் கொழுக்கட்டை செய்வது எப்படி.?!
raagi paal kozhukkattai preparation
ராகி பால் கொழுக்கட்டையின் பயன்கள்:
ராகி பிற தானியங்களை போல அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தானியம். அதிக எடை, ரத்த சோகை, தூக்கப் பிரச்சனைகள், பதற்றம் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆரோக்கிய உணவாகும்.
மாலையில் பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான இந்த கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம்.
![](https://img.seithipunal.com/media/raagi-qt9k5.png)
தேவையானவை:
ராகி மாவு - கால் கப்
அரிசி மாவு - 1 கப்
பால் - 1 கப்
பச்சை ஏலக்காய் - 3
தண்ணீர் - 1 கப்
சர்க்கரை - அரை கப்
உப்பு - 1 சிட்டிகை
செய்முறை:
![](https://img.seithipunal.com/media/ragi paal-wrufa.png)
ஒரு பாத்திரத்தில் முதலில் நீரை ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து கையால் கிளறி சுடுநீரை ஊற்றி, கரண்டியால் கிளறி, சூடு ஆறியதும் கையால் பிசைந்து, மூடி 3 நிமிடம் ஊற வைக்கவும்.
ஒரு பாத்திரித்தில் பால் மற்றும் நீரை ஊற்றி 5 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.
அதன் பின், சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடியை போட்டு நன்றாக கிளறி கொதிக்க விட்டு பிறகு பிசைந்த மாவை ஒரு கை எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பாலில் போடவும்.
இதேப் போல் அனைத்து மாவையும் பாலில் உருட்டி போட்டு 3-5 நிமிடம் அப்படியே வேக வைத்து இறக்கினால், சூடான சுவையான ராகி பால் கொழுக்கட்டை ரெடி.!
English Summary
raagi paal kozhukkattai preparation