ஓபிஎஸ்-ன் சொந்த ஊரில் எடப்பாடி பழனிச்சாமி! இன்னும் 13 நாளில் நடக்கப் போகும் சம்பவம்!
ADMK edappally panichamy ops Theni periyakulam meeting
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் காவல் தெய்வம் அம்மாவின் 77-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 25.2.2025 செவ்வாய்க் கிழமை முதல் 1.3.2025- சனிக் கிழமை வரை 5 நாட்கள், 'ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.
கழக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகளும், தாங்கள் சார்ந்த தொகுதிகளில் நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.
மாவட்டக் கழகச் செயலாளர்கள், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்டங்களை கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்புகொண்டு, ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கும், "நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழுக்கும்" அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .
இதில் தேனி மாவட்டம் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் சொந்த ஊரான பெரிய குளத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாள் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஓ பன்னீர்செல்வம் எந்த நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயாராக இருப்பதாக பேட்டியளித்திருந்த நிலையில், அவரது ஊரிலேயே எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுகவின் கூட்டம் நடைபெற இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
ADMK edappally panichamy ops Theni periyakulam meeting