கொஞ்சம் புதுமையான 'திராட்சை அல்வா' இப்படி செஞ்சி பாருங்க! டேஸ்ட்ல அசந்துருவீங்க! - Seithipunal
Seithipunal


கேரட் அல்வா, முந்திரி அல்வா சாப்பிட்டு இருப்போம். ஆனால் திராட்சை அல்வா சாப்பிட்டு இருக்கீங்களா? வாங்க இப்படி அருமையா செய்து திராட்சை அல்வா சாப்பிடுவோம்.

தேவையான பொருட்கள் 
திராட்சை பழம்  - 1  கிலோ 
சோளமாவு           -  1/2  கப் 
நெய்                       -  தேவையான அளவு 
வெல்லம்             -   1  கப் 
முந்திரி                 -  சிறிதளவு 
பாதாம்                  -  சிறிதளவு

 செய்முறை :

திராட்சை பழத்தை எடுத்து அதனை சுத்தமாக நன்றாக கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் திராட்சை பழத்தை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் சோளமாவை கலந்து வைக்கவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் ஒரு கப் வெள்ளத்தை போட்டு பாகு தயாரிக்க வேண்டும். 

வெல்லமானது நன்றாக பாகு நிலையை அடைந்ததும், அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து அரைத்த திராட்சை கலவையை சேர்த்து கிளறவும் அதன் பின் வெல்லப்பாகு சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

கிளறும் போது நெய் சேர்த்து நன்றாக கிளறி இருகும் பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும்.

பின்னர் இவற்றின் மீது அலங்காரத்திற்காக பாதாம் மற்றும் முந்திரியை பொடியாக நறுக்கி தூவி  அல்வா ஆரிய உடன் வெட்டி சாப்பிட்டால் மிகவும் தித்திப்பாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

recipe of sweet grapes halwa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->