அசத்தலான சேலம் ஸ்டைல் 'சிக்கன் சுக்கா கிரேவி'! இப்படி செஞ்சு பார்க்கலாம் வாங்க! - Seithipunal
Seithipunal


இந்த வாரம் சிக்கன் சமைக்கிற ஐடியாவில் இருக்கீங்களா??? அப்போ இந்த சேலம் ஸ்டைல் சிக்கன் சுக்கா கிரேவிய ட்ரை பண்ணி பாருங்க! 

தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1  கிலோ 
சோம்பு  - 1  டீஸ்பூன் 
கறிவேப்பிலை  -  சிறிதளவு 
மஞ்சள் தூள்      - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி    -  சிறிதளவு 
உப்பு                     -  சுவைக்கேற்ப
எண்ணெய் - 3 டீ ஸ்பூன்

மசாலாவிற்கு அரைக்க வேண்டிய பொருட்கள்:

துருவிய  தேங்காய்   - 1  டேபிள்ஸ்பூன் 
சின்ன வெங்காயம்    - 5
கிராம்பு - 2
பட்டை - 1 இன்ச்
சோம்பு - 1 டீஸ்பூன்
சிறிய தக்காளி - 1
மல்லி - 1 டீஸ்பூன்
மிளகு - 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை :
சிக்கனுடன் மஞ்சள் தூள் சேர்த்து  நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.

ஒரு மிக்சர் ஜார் எடுத்து அதில் தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி,  மல்லி, மிளகுத்தூள், பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து நன்றாக மை போல அரைத்துக் கொள்ள வேண்டும்.

வாணலியை அடுப்பில் வைத்து  எண்ணெய் ஊற்றி நன்றாக எண்ணெய் காய்ந்ததும் அதில் சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்க வேண்டும். 

பின்னர் இதனுடன் சிக்கன் சேர்த்து  சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு போட்டு நன்றாக கிளறி விட வேண்டும்.

சிக்கனை நன்றாக வெந்து தண்ணீர் விட்டதும், அதில் அரைத்து வைத்திருந்த மசாலாவை ஊற்றி சிறிதளவு நீர் ஊற்றி நன்றாக கிளறி விட்டு 15 முதல் 20 நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்க வேண்டும்.

20 நிமிடம் கழித்து சிக்கன் நன்றாக வெந்திருக்கிறதா? என்று பார்த்துவிட்டால் அருமையான சேலம் ஸ்டைல் சுக்கா ரெடி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salem style chicken sukka receipe


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->