கோடை வெயிலுக்கு சாப்பிடும் வெள்ளரிக்காயில் இவ்வளவு நன்மைகளா?
so many health benefts of cucumber
சுட்டெரிக்கும் கோடை வெயிலிருந்து நம் உடல் சூட்டை தணித்துக் கொள்ள நாம் சாப்பிடும் வெள்ளரிக்காயில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. இவை நம் உடலை உஷ்ணத்திலிருந்து பாதுகாப்பதோடு உடலுக்கு தேவையான சத்துக்களையும் வழங்குகிறது. அவற்றின் பயன்கள் என்ன என்று பார்ப்போம்.
வெள்ளரிக்காய் நீர் சத்துக்களால் நிரம்பிய காய்கறி ஆகும். இதில் ஏராளமான நீர் சத்துக்களும், நார்ச்சத்துக்களும் நிறைந்து இருக்கின்றன. மேலும் வெள்ளரிக்காயில் வைட்டமின்கள் இல்லை என்றாலும் தாது பொருட்களான சோடியம், கால்சியம், மக்னீசியம், இரும்பு பாஸ்பரஸ், சல்பர் போன்றவை நிறைந்து இருக்கின்றன.
வெள்ளரிக்காயில் நம் ரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது. மேலும் இவற்றிற்கு நம் கல்லீரலின் சூட்டை தணிக்கும் ஆற்றலும் உண்டு.
இவை நம் உடலை நீரேற்றுடன் வைப்பதுடன் உடலின் உஷ்ணத்தை குறைக்க வழிவகிக்கிறது. மேலும் செரிமானத்தை அதிகப்படுத்துகிறது. இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலின் செரிமான தன்மையை அதிகரிக்கின்றன.
காய்கறிகளிலேயே மிகக் குறைந்த அளவு கலோரிகள் கொண்டது வெள்ளரிக்காய் தான். இவற்றை நாம் எடை குறைப்பிற்கும் பயன்படுத்தலாம் 100 கிராம் வெள்ளரிக்காயில் வரும் 18 கிராம் கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.
வெள்ளரிக்காயை சமைத்து சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை அப்படியே சாப்பிடலாம். இது உடல் சூட்டை தணிக்கும் ஆற்றல் கொண்டது சிறுநீர் பிரிவை தூண்டக் கூடியது மேலும் இரைப்பையில் ஏற்படும் புண்களை குணப்படுத்தும் ஆற்றல்மிக்கது.
English Summary
so many health benefts of cucumber