உங்க வீட்டு சாம்பார், இனி சூப்பர் சுவையில் இருக்கும்.. இது ஒன்ன ட்ரை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


நாம் பல ஓட்டல்களில் சாம்பார் சாப்பிட்டு விட்டு அதுபோல நம்மால் வீட்டில் சமைக்க முடியவில்லை என்று கவலை அடைவோம். அப்படி சாம்பாருக்கு சுவையை கூட்டும் மசாலா எப்படி தயார் செய்வது என பார்க்கலாம்.

தேவையானவை : 

கால் கிலோ -  மிளகாய் வத்தல் 

300 கிராம் - கொத்தமல்லி 

50 கிராம் - துவரம் பருப்பு 

நூறு கிராம்-  சீரகம் 

50 கிராம் - கடலை பருப்பு

 25 கிராம் - வெந்தயம் 
 
25 கிராம் - மிளகு 

செய்முறை : 

மிளகாய் வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின் சீரகம், கொத்தமல்லி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், மிளகு உள்ளிட்ட ஒவ்வொன்றையும் தனித்தனியாக வானலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். 

இதை கருக விடாமல் மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். வத்தல் காய்ந்த பின் அனைத்து பொருட்களையும் மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளலாம்.

இந்த சாம்பார் பொடியை புளிக்குழம்பு, கூட்டு, சாம்பார், கறி குழம்பு உள்ளிட்ட அனைத்திற்கும் உபயோகிக்கலாம். 

காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு ஐந்து மாசம் வரை பயன்படுத்த முடியும். உங்கள் சாம்பார் சுவையாகவும் சூப்பராகவும் இருக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Super taste sambar recipe


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->