உடல் எடையை குறைக்க சூப்பரான சுரைக்காய் சூப்.!
Suraikkai soup Preparation in Tamil
தேவையானவை :
சுரக்காய் 1 கப்,
பாசிப்பருப்பு 3 ஸ்பூன்,
பெரிய வெங்காயம் 1,
தக்காளி 1,
பச்சை மிளகாய் 2,
கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு,
உப்பு தேவையான அளவு,
பூண்டு ஐந்து பல்,
சின்ன சீரகம் அரை ஸ்பூன்,
மிளகு 6,
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்,
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை :
குக்கரில் சுரைக்காயை போட்டு அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு தேவையான அளவு, தண்ணீர் மூன்று டம்ளர் ஊற்றி குக்கரை மூடி போட்டு மூடி, ஐந்து விசில் வரை வைக்கவும்.
விசில் வந்ததும் இறக்கி வைத்து தாலிப்புக்கு எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை போட்டு சூப்பில் ஊற்றவும், இப்பொழுது கொத்தமல்லியை நறுக்கி தூவி இறக்கவும், சுவையான சுரைக்காய் சூப் தயார்.
குறிப்பு : சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கை, கால் வீக்கம் குறையும், மற்றும் உடல் எடை எடையை குறைக்கும். உடலில் உள்ள தேவையற்ற சதைகளையும் குறைக்கும்.
English Summary
Suraikkai soup Preparation in Tamil